மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகள்!

Written By:

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த போட்டியில் முன்னிலை பெறுவதற்கு பங்கேற்றுள்ள அணிகளும், வீரர்களும் மொத்த வித்தையையும் காட்டி வருகின்றனர்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகள்!

இந்திய மோட்டார்ஸ்போர்ட் உலகின் சவால்கள் நிறைந்த மிக நீண்ட தூர ராலி பந்தய வழித்தடத்தை போட்டியாளர்கள் பல தடங்கல்களை எதிர்கொண்டு கடந்தனர். இந்த வழித்தடமானது பாலைவனம், மலைப்பாங்கான பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகள்!

மூன்றாவது ஸ்டேஜில் எக்ஸ்ட்ரீம் பிரிவில் கிராண்ட் விட்டாரா காரில் வந்த சுரேஷ் ராணா, அஷ்வின் நாயக் இணை முன்னிலை பெற்றது. மாருதி ஜிப்ஸியில் வந்த சந்தீப் ஷர்மா, கரண் ஆர்யா இணை இரண்டாம் இடத்தையும், பஜேரோ எஸ்யூவியில் வந்த நிஜு பாடியா மற்றும் நிரவ் மேத்தா இணை மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகள்!

மோட்டோ பிரிவில் சிஎஸ்.சந்தோஷ் முதல் இடத்தையும், நட்ராஜ், தன்வீர் ஆகியோர் முறையே இரண்டாவது,மூன்றாவது இடங்களை பிடித்தனர். என்ட்யூர் பிரிவில் அர்பித் குப்தா மற்றும் டி.நாகராஜன் வெற்றி பெற்றனர்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகள்!

எக்ஸ்ப்ளோர் பிரிவில் அலி அஜ்கர் மற்றும் முகம்மது முஸ்தபா வெற்றி பெற்றனர். கார்த்திக் மாருதி மற்றும் சங்கர் ஆனந்த் இரண்டாவது இடத்தையும், அனுபம் சந்திரா மற்றும் அதீஷ் அகர்வால் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி: மூன்றாவது ஸ்டேஜ் முடிவுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோரம் ராலி பந்தயத்தை மாருதி மோட்டார்ஸ்போர்ட் அமைப்பு நடத்துகிறது. இந்த போட்டிக்கு மொபில் ஆயில் நிறுவனம் ஸ்பான்சராக செயல்படுகிறது. போட்டியில் பங்கேற்றிருக்கும் வாகனங்களுக்கான எரிபொருள் மற்றும் ஆயிலை மொபில் நிறுவனம் வழங்கி வருகிறது.

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்!

மாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.

English summary
The leg 3 of the 2017 Maruti Suzuki Desert Storm has concluded. Suresh Rana and CS Santosh lead the Extreme and Moto category respectively.
Story first published: Thursday, February 2, 2017, 11:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more