இந்த விலையிலா வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்?

Written By:

கார் மார்க்கெட்டில் கொடி கட்டி பறக்கும் மாருதி பிராண்டுக்கு போட்டியாக விஸ்வரூபம் எடுத்த மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்ந்த நிறைவான கார். இந்த நிலையில், புதிய மாடல்களின் வருகையால், கடந்த 2014ம் ஆண்டு ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது.

இந்த விலையிலா வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்?

இந்த நிலையில், ஹூண்டாய் சான்ட்ரோ பிராண்டுக்கு புதுவாழ்வு கொடுக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும், போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விலையில் இந்த காரை களமிறக்கும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த விலையிலா வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்?

பழைய சான்ட்ரோ கார் டால்பாய் டிசைன் கான்செப்ட்டில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், புதிய மாடல் ஹூண்டாய் நிறுவனத்தின் புளூயிடிக் டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்படுகிறது. எனவே, வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக இருக்கும்.

இந்த விலையிலா வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்?

2018 AH என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய சான்ட்ரோ கார் மிகவும் கவர்ச்சியாகவும், ஸ்டைலான தோற்றத்துடன் வருகிறது. முன்புறம் மற்றும் பின்புறம் ஆகியவை இளைய சமுதாயத்தினரை வெகுவாக ஈர்க்கும். அத்துடன், வழக்கம்போல் மிகுந்த இடவசதி கொண்டதாக இருக்கும்.

இந்த விலையிலா வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்?

புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படும். அதிக பவரையும், அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாக இந்த 1.0 லிட்டர் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்படுகிறது.

இந்த விலையிலா வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்?

புதிய சான்ட்ரோ காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன்மூலமாக, போட்டியாளர்களை ஒரு கை பார்க்க ஹூண்டாய் சான்ட்ரோ தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு அக்டோபரில் புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த விலையிலா வருகிறது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்?

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பட்ஜெட் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் சான்ட்ரோ கார் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017  பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் சொகுசு காரின் ஆல்பம்!

புதிய பிஎம்டபிள்யூ 4 சீரிஸ் சொகுசு காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள ஆல்பத்தை க்ளிக் செய்து பார்க்கலாம்.

English summary
The 2018 Hyundai Santro will hit the Indian market by 2018 and according to the reports the new model will be launched at just Rs 3.5 lakh.
Story first published: Tuesday, January 17, 2017, 17:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark