2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது சுசுகி..!!

Written By:

சுசுகியின் முற்றிலும் புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

பெரிய எதிர்பார்பிற்கு மத்தியில் ஒருவழியாக ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது சுசுகி.

ஹார்ட்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தயாராகியுள்ள இந்த காரின் வடிவம் முற்றிலும் ஸ்போர்ட் தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய தலைமுறையிலான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் எடை குறைந்த அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

2018 சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் 1.4 லிட்டர் பூஸ்டர் ஜெட் 4 சிலிண்டர் டர்போ எஞ்சின் உள்ளது. இதே எஞ்சின் சுசுகியின் பிரெஸ்ஸா விட்டாரா எஸ் காரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

இதன்மூலம் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரில் முன்னர் இருந்த 1.6 லிட்டர் நேச்சுரலி ஏஸ்பிரேடட் எஞ்சின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே மாடலில் இருந்த 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த புதிய காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

புதிய எஞ்சின் மற்றும் கியர்பாஸ் கூட்டணி மூலம் 138 பிஎச்பி பவர் மற்றும் 230 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

2018 சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தற்போதைய கார் மாடலில் இருந்து முற்றிலும் புதிய தோற்றப்பொலிவு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹனிகோம் க்ரில், பம்பர் மற்றும் லிப்-ஸ்பாய்லர் போன்ற அம்சங்கள் காரின் தோற்றத்திற்கு புதுமை சேர்கின்றன.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

குறைக்கப்பட்ட பக்க ஓரங்கள், டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், பிளாக்ஸ் டிஃபூயஸர் மற்றும் ட்வின் எக்ஸாஸிட் போன்ற கவர்ந்திழுக்கும் அம்சங்கள் இதில் நிறைவாக பொருத்தப்பட்டுள்ளன.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

புதிய சஸ்பென்ஷன், காரின் கீழே பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட இந்த புதிய காரின் கிரவுண்ட் கிளயரன்ஸ் 15மிமீ குறைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சுசுகி கூறுகிறது.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

வெளிப்புற கட்டமைப்புகள் மட்டுமின்றி தற்போதைய சுசுகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலில் உட்புற கட்டமைப்புகளும் பெரியளவில் மாற்றம் பெற்றுள்ளன.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

ஸ்போர்ட்ஸ் தரத்திலான இருக்கைகள், ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களின் கலவையில் உருவான கேபின்.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

ஸ்போர்டி டயல் கொண்ட இன்ட்ஸ்ரூமெண்ட் கிளஸ்டர், ரேஞ்ச்-டாப்பிங் ஸ்விப்ஃட், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும்

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

மிரர்லிங் கனெக்டிவிட்டி உடன் பெற்ற தொடுதிரை வசதி உடன் கூடிய 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் உள்ளன.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

மேம்பட்ட முன்னோக்கை கண்டறிதல், இரட்டை சென்சார் பிரேக் ஆதரவு, லேன் புறப்பாடு எச்சரிக்கை, அடேப்டிவ் க்ரூஸ் கட்டுப்பாடு

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

ஆகியவற்றுடன் 6 ஏர்பேகுகள், ஏபிஎஸ், இஎஸ்சி மற்றும் தானியங்கி பிரேக் அமைப்பு போன்றவை 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் பாதுகாப்பு அம்சங்களாக உள்ளன.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

ஃபிராங்க்பூர்ட் கண்காட்சியில் 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் வெளியிடப்பட்டு இருந்தாலும், அதனுடைய விலையை விரைவில் சுசுகி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

இந்திய வாடிக்கையாளர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார், இந்தியாவில் விற்பனைக்கு வராது என்பது பெரிய சோகத்தை தரும் செய்தி.

புதிய 2018 ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் தரிசனம் தந்தது..!!

ஆனால் இதே காரின் ஸ்டான்டர்டு ஸ்விஃப்ட் மாடல் 2018ம் ஆண்டில் டெல்லி எக்ஸ்போவில் சுசுகி அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #சுசுகி #suzuki
English summary
Read in Tamil: 2018 Suzuki Swift Sport Makes Public Debut at Franfurt 2017. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark