மீண்டும் உச்சம்... மீண்டும்அதிரடி... இந்திய ஆட்டோமொபைல் சந்தையை மிரட்டும் ஹோண்டா சிட்டி..!!

Written By:

நான்காவது தலைமுறையாக அறிமுகமான ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் 2.5 லட்சம் அளவில் விற்பனை ஆகியுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

தற்போது இந்திய சாலைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் ஹோண்டா சிட்டி கார்கள் 2014ம் ஆண்டு அறிமுகமானது.

செடான் மாடலில் ஹோண்டா தயாரித்த கார்களிலேயே சிட்டி மாடலுக்கான வரவேற்பு இந்தியாவில் ஏறுமுகத்தில் உள்ளது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

இந்தியா மட்டுமில்லாமல், உலக அளவில் குறிப்பிடும்படியான பத்து நாடுகளில் 2014 சிட்டி மாடல் காரின் விற்பனை 10 லட்சத்தை கடந்துள்ளதாக ஹோண்டா கூறுகிறது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

இதன்மூலம் ஹோண்டா சிட்டி மாடல் காருக்கு இந்தியா தான் முதன்மையான சந்தையை பெற்றிருப்பது நமக்கு தெரிய வருகிறது.

மேலும் உலகளவில் இந்த காரின் விற்பனை கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

இதுகுறித்த பேசிய ஹோண்டா இந்தியாவின் தலைமை அதிகாரியான யொயிசிரோ உயெனோ,

"இந்தியாவில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கான புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்தது ஒரு அற்புத அர்ப்பணிப்பாகும். வாடிக்கையாளர்களே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள்" என்று கூறினார்.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

சிட்டி காரின் மிட்-லைஃப் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஹோண்டா இந்த ஆண்டில் வெளியிட்டது. ஸ்டைலாக, ஸ்மார்ட்டான மற்றும் சொகுசான அம்சங்களுடன் இந்த புதிய சிட்டி கார் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

பகல் உட்பட எல்லா நேரங்களிலும் எரியும் எல்.இ.டி முகப்பு விளக்குகள். 7 அகல தொடுதிரை வசதியுடன் கூடிய ஒலி மற்றும் ஒளி வடிவுடன் கூடிய நேவிகேஷன்.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

ஆண்ட்ராய்டுடன் கூடிய இண்டர்ஃபேஸ் இணைப்பு போன்ற அம்சங்கள் 2017 ஹோண்டா சிட்டி காரின் குறிப்பிடும்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

டூயல் ஏர்பேகுகள், தானியங்கி பிரேக் அமைப்பு, மின்னணு பிரேக் விநியோகம் (EBD) என பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் குறிப்பிடும்படியாக உள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் என இரு எரிவாயு மாடல்களிலும் 2017 ஹோண்டா சிட்டி விற்பனை செய்யப்படுகிறது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட 2017 ஹோண்டா சிட்டி 117 பிஎச்பி பவரை வழங்குகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கார் 99 பிஎச்பி பவரை வழங்குகிறது.

5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி யூனிட் என இதனுடைய கியர்பாஸ் அமைப்பு காரின் மாடலுக்கு ஏற்ப பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

இருப்பினும் உலகளவில் 30 சதவீத வாடிக்கையாளர்கள் சிவிடி கியர்பாக்ஸுடன் கூடிய பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஹோண்டா சிட்டி காரையே அதிகளவில் தேர்வு செய்வதாக ஹோண்டா கார் நிறுவனம் கூறுகிறது.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

சிட்டி மாடல் போலவே மாருதி சுசுசி நிறுவனம் 2014 செப்டம்பர் மாதம் வெளியிட்ட கார் சியாஸ். 8 மாத கால தாமதத்தில் இது வெளிவந்தாலும், சிட்டிக்கு சரிநிகர் போட்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சியாஸ் தான்.

ஹோண்டா சிட்டி விற்பனையில் புதிய மைல்கல்..!!

2014 செப்டம்பரில் அறிமுகமான இந்த கார், மே 2017 வரை 1.5 லட்சம் அளவில் இந்தியாவில் விற்பனையாகியுள்ளதாக மாருதி சுசுகி தெரிவிக்கிறது.

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Read in Tamil about 4th Generation Honda City Car Has Crossed the 2.5 Lakh Sales in India. Click for Details...
Story first published: Friday, June 30, 2017, 11:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark