இந்தியாவில் அடுத்தாண்டில் கால்பதிக்கும் புதிய மாருதி ஸ்விப்ஃட் கார் பற்றிய விசேஷ தகவல்கள்...!!

இந்தியாவில் அடுத்தாண்டில் கால்பதிக்கும் புதிய மாருதி ஸ்விப்ஃட் கார் பற்றிய விசேஷ தகவல்கள்...!!

By Azhagar

ஒரு தாசப்பத்த காலமாக இந்தியர்களிடம் வரவேற்பை பெற்று வரும் மாடலாக இருந்து வருகிறது மாருதி ஸ்விஃப்ட் கார். பல கட்ட நகர்வுகளுக்கு பிறகு புதிய தலைமுறைக்கான மாருதி சுசுகி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விரைவில் களம்காணவுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள்!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக உள்ள புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் மாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள 5 முக்கிய முன்னேற்றங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

இடவசதி

இடவசதி

ஸ்விஃப்ட் டிசைர் மற்றும் பலேனோ கார்கள் உருவாக்க அடித்தளமாக இருந்த ஹீடாக்ட் பிளாட்ஃபாரம் கீழ் தான் இந்த முற்றிலும் புதிய ஸ்விஃப்ட் கார் தயாராகியுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள்!

தற்போது ஸ்விஃப்ட் காரின் வீல் பேஸ் 2430மிமீ. இதனுடன் கூடுதலாக 20 மிமீ சேர்க்கப்பட்டு, புதிய தலைமுறைக்கான ஸ்விஃட் காரின் வீல் பேஸ் 2450 மிமீ-ஆக கூட்டப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள்!

இதன் காரணமாக காருக்குள் அதிக இடவசதி இருக்கும், மேலும் காருக்கான ஸ்போர்டியர் தோற்றத்திற்காக மேற்கூரையின் அளவு 30 மிமீ குறைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள்!

265 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது, இதன் காரணமாக கூடுதலாக 60 லிட்டர் புதிய தலைமுறைக்கான காரின் மூலம் கிடைக்கும்.

உள்கட்டமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், உடமைகளை வைப்பதில் எந்த சிரமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்போர்டியர்

ஸ்போர்டியர்

தற்போதைய மாடலை விட 120 கிலோ எடை குறைந்து இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இதை ஓட்டுவது மிகவும் இலகுவாக இருக்கும்.

புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள்!

சிறந்த செயல்பாட்டு திறன் மற்றும் எரிசக்தி சேமிக்கும் திறன் இதில் அடங்கி இருக்கிறது. பழைய மாடல்களை விட இந்த புதிய கார் சிறந்த பிக்-அப்பை பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தானியங்கி செயல்பாடுகள்

தானியங்கி செயல்பாடுகள்

வாகன உலகம் தற்போது தானியங்கி செயல்பாடுகளை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள்!

இதுவரை இந்த அம்சம் ஸ்விப்ஃட் மாடல்களில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேவை புதிய ஸ்விஃப்ட் காரின் டீசல் மற்றும் பெட்ரோல் தேவைகளில் கிடைக்கும்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டார்ய்டு ஆட்டோ உடன் கூடிய இன்ஃபோடெய்ன்மண்ட் சிஸ்டம் இந்த காரில் உள்ளது. மேலும் பகலிலும் எரியும் விளக்குகள், டிசைரில் உள்ள முகப்பு விளக்குகள் ஆகியவை புதிய ஸ்விஃப்ட் காரின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஸ்விஃப்ட் மாடலுக்கு என்றே இருக்கும் ஏர்பேகுகள், தட்டையான ஸ்டீயரிங் வீல் மற்றும் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கும் டிஸ்பிளே போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது கவனமீர்க்கிறது.

புதிய ஸ்விஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள புதிய அம்சங்கள்!

ரியல் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்களும் புதிய தலைமுறைக்கான ஸ்விப்ஃட் காரில் பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Read in Tamil: Maruti Suzuki Swift gets 5 Big Improvements in Look.Space, Technicians. Click for Details...
Story first published: Monday, September 25, 2017, 17:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X