2018 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்கும் 5 புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்கள்...முழுத் தகவல்கள்...!!

Written By:

புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை மாருதி சுஸுகி 2018 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடுகிறது. இந்த காரின் அனைத்து வேரியன்டுகளும் அன்றே அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

ஸ்விஃப்ட் காருக்கான எல்லா வேரியன்டுகளும் ஒரே நாளில் வெளிவருவது இதுதான் முதல்முறை. இந்நிலையில் இதன் வேரியன்டுகள் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

ஸ்விஃப்ட் பெட்ரோல் 1.2

ஸ்விஃப்ட் பெட்ரோல் 1.2

2018 ஸ்விஃப்ட் காரில் விலை மிகவும் மலிவான மாடல் இதுதான். 2ம் தலைமுறை ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் கே-சிரீஸ் பெட்ரோல் எஞ்சின் தான் புதிய ஸ்விஃப்ட் 1.2 காரிலும் இடம்பெறுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை கொண்டுள்ள இந்த கார் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி மட்டும் 112 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இது, ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

அதன்காரணமாக குறைந்த எடையில், அதிக எரிவாயு சிக்கனம் செய்யும் திறன் பெற்ற மாடலாக புதிய ஸ்விஃப்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் கார் இருக்கும் என மாருதி சுஸுகி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் டீசல் 1.3

ஸ்விஃப்ட் டீசல் 1.3

டீசல் திறனில் இயங்கும் ஸ்விஃப்ட் கார், வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான மாடல். அதனால் புதிய வெர்ஷனில் டீசல் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Tiago XTA AMT Variant Launched In India - DriveSpark
இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

2018 ஸ்விஃப்ட் டீசல் 1.3 காரில் 1248சிசி ஃபியட் மல்டிஜெட் டர்போடீசல் உள்ளது. இது அதிகப்பட்சமாக 74 பிஎச்பி பவர் மற்றும் 190 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை பெற்றுள்ள இந்த கார் முன்பக்க சக்கர இயக்கத்தை பெற்றது. பெட்ரோல் மாடலை போலவே, இந்த டீசல் ஸ்விஃப்ட் காரும் எரிவாயு சேமிப்பு, குறைந்த எடை ஆகிய அம்சங்களை பெற்றிருக்கிறது.

ஸ்விஃப்ட் பெட்ரோல் ஏஎம்டி

ஸ்விஃப்ட் பெட்ரோல் ஏஎம்டி

ஏஎம்டி கொண்ட கார்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வது அதிகரித்து வருகிறது. அதை கருத்தில் கொண்டு மாருதி சுஸுகி 2018 ஸ்விஃப்ட் காரை ஏ.எம்.டி தேவையிலும் வெளியிடுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

1.2 லிட்டர் கே சிரீஸ் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஸ்விஃப்ட் காரில் 5-ஸ்பீடு ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதே தேர்வு ஸ்விஃப்ட் டிசையர் மற்றும் இக்னிஸ் கார்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விஃப்ட் டீசல் ஏஎம்டி

ஸ்விஃப்ட் டீசல் ஏஎம்டி

பெட்ரோல் போலவே டீசல் ஸ்விஃப்ட் மாடலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவையில் வெளிவருகிறது. இது நிச்சயம் இந்த மாடலுக்கு பெரிய வரவேற்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஸ்விஃப்ட் ஸ்போர்ட்

ஸ்விஃப்ட் ஸ்போர்ட்

2018ல் அறிமுகமாகும் இந்த புதிய ஸ்விஃப்ட் கார் ஹேட்ச்பேக் மாடலுக்கான புதிய டிரன்ட் செட்டராக அமையும். அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளிவரும் கார் தான் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் பெற்ற இந்த ஸ்போர்ட் மாடல், 138 பிஎச்பி பவர் மற்றும் 230 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவையை பெற்றுள்ள இந்த கார், மாருதி சுஸுகி விற்பனை செய்த ஸ்போர்ட் மாடல்களில் பெரிய விற்பனையை பெறும் காராக அமையும்.

ஸ்விஃப்ட் ஹைஃபிரிட்

ஸ்விஃப்ட் ஹைஃபிரிட்

மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி பல தயாரிப்பு நிறுவனங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், மாருதி சுஸுகி வெளியிடும் மாடல் தான் ஸ்விஃப்ட் ஹைஃபிரிட் கார்.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

இந்தியாவில் இந்த கார் 2018ம் ஆண்டு இறுதியில் வெளிவரும் சூழ்நிலையில், 1.2 லிட்டர் கே-சிரீஸ் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 10 கிலோ வால்ட் மின்சார மோட்டாரை ஸ்விஃப்ட் ஹைஃபிரிட் மாடல் பெற்றுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள்..!!

5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை பெற்றுள்ள இந்த கார் 2 டிரைவ் மோடுகளை பெற்றுள்ளது. அதன்மூலம் இந்த காரை ஹைஃபிரிட் மற்றும் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுக்கு தேவைக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.

English summary
Read in Tamil: 5 New Maruti Suzuki Swift Cars Coming To India on 2018 Auto Expo. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark