2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

Written By:

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான எஸ்யூவி மாடலாக டஸ்ட்டர் விளங்குகிறது. உலக அளவில் வாடிகக்கையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற டஸ்ட்டர் எஸ்யூவி தற்போது பல்வேறு மாறுதல்களுடன் புதிய மாடலாக விற்பனைக்கு வர இருக்கிறது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

டஸ்ட்டர் எஸ்யூவியானது ரெனோ பிராண்டிலும், டேஸியா பிராண்டிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பிராங்க்ஃபர்ட் நகரில் நடந்த சர்வதேச மோட்டார் கண்காட்சியில், டஸ்ட்டர் எஸ்யூவி டேஸியா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

இந்த நிலையில், தென் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் விற்பனைக்கு செல்ல இருக்கும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதே மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என்பதால், இந்த எஸ்யூவியின் படங்கள், விபரங்களை இப்போது பகிர்ந்து கொள்கிறோம்.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

டேஸியா பிராண்டில் முதலில் வெளியிடப்பட்ட புதிய டஸ்ட்டர் எஸ்யூவிக்கும், ரெனோ பிராண்டில் வர இருக்கும் ரெனோ டஸ்ட்டருக்கும் சிறிய வித்தியாசங்கள் உண்டு. புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் முகப்பு க்ரில் அமைப்பு, கோலியோஸ் மற்றும் ரெனோ பிக்கப் அப் டிரக்குகள் போன்ற சாயலை பெற்றிருக்கிறது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

இந்த க்ரில் அமைப்பு, ஹெட்லைட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், ஹெட்லைட்டில் எல்இடி பகல்நேர விளக்குகள் பகுதிகளாக பிரிக்கப்பட்டு முக வசீகரத்திற்கு வலு சேர்க்கும் விஷயமாக மாறி இருக்கிறது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் பக்கவாட்டில் வீல் ஆர்ச்சுகள் மிக பலமாக தெரிகிறது. முன்புற கண்ணாடி அமைப்பும், 100 மிமீ முன்னால் தள்ளப்பட்டு, மேலும் சரிவான அமைப்பை பெற்றிருக்கிறது. விண்ட் ஸ்க்ரீன் அமைப்பு மாற்றம் காரணமாக, உட்புறத்தில் கூடுதல் இடவசதி பெறப்பட்டு இருக்கிறது.

புதிய டஸ்ட்டர் எஸ்யூவியில் அலுமினியம் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 17 அங்குல அலாய் வீல்களும் பிரம்மாண்டத்தை கூட்டுகிறது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

புதிய ரெனோ டஸ்ட்டரின் பின்புறத்தில் முத்தாய்ப்பாக தெரிவது, X- வடிவிலான டெயில் லைட் அமைப்பு. ஜீப் ரெனிகேட் எஸ்யூவியின் சாயல் அப்படியே தெரிகிறது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

உட்புறத்திலும் டேஸியா டஸ்ட்டரிலிருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வட்ட வடிவிலான ஏசி வென்ட்டுகளுக்கு பதிலாக, செவ்வக வடிவிலான ஏசி வென்ட்டுகள் இதில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, டெரானோ எஸ்யூவியில் இருப்பது போன்ற அமைப்புடன் ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றுள்ளன.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சி்ஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, பிளைன்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த காருக்கு கொடுக்கப்பட இருக்கும் விசேஷ சாவி மூலமாக தூரத்தில் வரும்போதே முன்கூட்டியே, காரின் ஏசியையும், எஞ்சினையும் ஸ்டார்ட் செய்ய முடியும்.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் கேபின் மிகச் சிறப்பான சப்தம் மற்றும் அதிர்வுகளை தடுக்கும் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகளின் தரமும் மேம்படுத்தப்பட்டு இருப்பதால், நீடித்த உழைப்பையும், அதிக சொகுசான உணர்வையும் தரும்.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

ஆஃப்ரோடு சாகசங்கள் செய்வதற்கு ஏற்ற பல விசேஷ தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டம், மல்டி- வியூ கேமரா, ஹில் டிசென்ட் கன்ட்ரோல், 4 வீல் டிரைவ் மானிட்டர், ஈக்கோ-2 டிரைவிங் மோடு உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் வருகிறது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்கு செல்லும் புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில், எத்தனால் எரிபொருளில் இயங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் 144 பிஎச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும். 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலேயே வரும். இந்தியாவில் சிவிடி கியர்பாக்ஸ் மாடலிலும் அறிமுகமாகும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

2017 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வெளியீடு- படங்களுடன், தகவல்கள்!

அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. வழக்கம்போல் தனக்கென உள்ள தனி வாடிக்கையாளர் வட்டத்தை இந்த புதிய மாடல் ஈர்க்கும் என நம்பலாம்.

மேலும்... #ரெனோ #renault
English summary
After the debut of the Dacia Duster in Frankfurt, Renault has revealed its version of the Duster for the emerging markets such as South America, Asia & Russia.
Story first published: Wednesday, November 15, 2017, 15:07 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark