2017 அல்வாஸ் 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

Written By:

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா பகுதியில் மூத்பித்ரி என்ற இடத்தில் உள்ள அல்வாஸ் பொறியியல் கல்லூரியில் 'மோட்டோரிக்' என்ற வாகன கண்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி தற்போது 4வது ஆண்டாக நடைபெற இருக்கிறது.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

இந்த ஆண்டுக்கான மோட்டோரிக்கண்காட்சி நாளை மறுதினம் நடக்கிறது. காலை 10.45 மணியளவில் துவங்கும் இந்த கண்காட்சியை அதானி உடுப்பி மின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிஷோர் அல்வா துவங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் சூப்பர் கார்கள், சூப்பர் பைக்குகள், சொகுசு கார்கள் மற்றும் விண்டேஜ் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

மேலும், மாறுதல்கள் செய்யப்பட்ட கஸ்டமைஸ் கார், பைக்குகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கின்றன. மொத்தத்தில் 200க்கும் மேற்பட்ட கார், பைக்குகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இந்த கண்காட்சியின்போது கார், பைக் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. தேசிய அளவில் புகழ்பெற்ற சாகச வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மயிர்கூச்செரிய செய்யும் சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

இந்த வாகன கண்காட்சியின் மூலமாக, தட்சிண கன்னடா பகுதியில் உள்ள மாணவர்கள் கார்களின் இடம்பெற்றிருக்கும் நவீன தொழில்நுட்பங்கள், எஞ்சின், சேஸி, வாகனத்தின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

இதுதவிர, அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும் உயர் வகை கார்கள், பைக்குகளை பார்ப்பதற்கும், அதுகுறித்த சிறப்பம்சங்களை தெரிந்துகொள்வதற்கும் இந்த கண்காட்சி வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று அல்வா பொறியியல் கல்லூரி வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

இந்த ஆண்டு கண்காட்சியில் தேசிய அளவில் கார் சாகசங்களில் முன்னணி வீரரான ஜெய்பூரை சேர்ந்த கவுரவ் கத்ரி சாகசங்களை செய்து காண்பிக்க இருக்கிறார். மங்களூரை சேர்ந்த தேசிய ராலி ரேஸ் சாம்பியன் அர்ஜுன் ராவ் மற்றும் ராகுல் காந்த்ராஜ் ஆகியோரும் சாகசங்களை நிகழ்த்திக்காட்ட இருக்கின்றனர்.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

உடுப்பியை சேர்ந்த ஹாட் பிஸ்டன்ஸ் குழுவும் சாகச நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறது. அத்னன் மற்றும் சுதீப் கோதாரி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு சாகசங்களை நிகழ்த்தி காட்ட உள்ளனர்.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

இந்த வாகன கண்காட்சியை அல்வா கல்வி அறக்கட்டளை, TASC, இந்திய மோட்டார்ஸ்போர்ட் க்ளக், பெட்ரா அட்வென்ச்சரஸ் க்ளப், கோஸ்ட்டல் ரைடர்ஸ், கேஎல்14 மற்றும் டீம் பெட்ரா யுனைடெட் ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த கண்காட்சியின் மீடியா பார்ட்னராக டிரைவ்ஸ்பார்க் இணைந்து செயலாற்ற உள்ளது என்பதை வாசகர்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அல்வா 'மோட்டோரிக்' கண்காட்சி நாளை மறுதினம் துவங்குகிறது!

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அல்வா பொறியியல் கல்லூரி வழங்கி வருகிறது. அனைத்து பொறியியல் பாடத் திட்டங்களுடன் மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை அளித்து வருகிறது மூத்பித்ரியில் இயங்கி வரும் அல்வா பொறியியல் கல்லூரி.

English summary
Alva’s Motorig to be held on 21st May 2017 at Alva’s Institute of Engineering Technology,Shobhavana Campus, Mijar, Moodbidri.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark