2020ல் அமலாகும் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு இப்போதே தயாரான அசோக் லேலண்ட்..!!

Written By:

இந்தியாவில் 2020ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கு பிஎஸ்6 மாசு விதி நடைமுறைக்கு வருகிறது.

விரைவில் நடக்கவிருக்கும் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள பல வாகன நிறுவனங்கள் துரித கதியில் தயாராகி வருகின்றன.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

கனரக வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் பிஎஸ்6 எஞ்சினை தயாரிக்கும் நோக்கில், ஹினோ மோட்டார்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

அதற்கான ஒப்பந்தப்படி, இரு நிறுவனங்களும் இணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் பிஎஸ்6 எஞ்சின் தயாரிப்பிற்கான பணிகளில் மும்முரமாக இறங்கும்.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

அசோக் லேலண்ட் ஏற்கனவே ஹினோ மற்றும் டொயோட்டா நிறுவனங்களுடன் இணைந்து வாகன எஞ்சினுக்கான மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

இந்நிலையில் எதிர்காலத்தில் வரவுள்ள பிஎஸ்6 அல்லது யூரோ 6 எஞ்சினுக்கான தயாரிப்பு பணிகளை தற்போதே தொடங்க அந்த நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

அசோக் லேலண்ட் மற்றும் ஹீனோ ஆகிய நிறுவனங்களின் ஒப்பந்தப்படி, ஹீனோவின் எஞ்சின் தயாரிக்கும் தொழில்நுட்பங்களை அசோக் லேலண்ட் பயன்படுத்திக்கொள்ளும்.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

மேலும் பல சர்வதேச நாடுகளில் இருந்து பெறப்படும் பொருட்களை வைத்து ஹினோ எஞ்சின் தயாரிப்பதற்கான ஒப்பந்தமும் இதில் கையெழுத்தாகியுள்ளன.

Recommended Video - Watch Now!
[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

பிஎஸ்6 எஞ்சினுக்கான இந்த ஒப்பந்தத்தை குறித்து பேசிய அசோக் லேலண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் வினோத் கே. தசாரி,

எதிர்காலத்தையும் தாண்டி நீண்ட கால செயல்பாட்டுகளை குறிவைத்து ஹினோ உடனான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக கூறினார்.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

நடைமுறையில் இருக்கும் பல வாகன தயாரிப்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பலரிடம் ஹினோ மோட்டார்ஸ் மிகுந்த நம்பகத்தன்மையை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

பிஎஸ்6 மாசு விதிகளுக்கு அசோக் லேலண்ட் புதிய ஒப்பந்தம்..!!

சர்வதேச அளவில் வாகன துறையில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் இத்துறையில் உள்ள செயல்பாடுகளை எண்ணி அசோக் லேலண்ட் மற்றும் ஹினோ மோட்டார்ஸின் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: Ashok-Leyland & Hino Motors Renew Partnership For Euro VI Engine Development. Click for Details...
Story first published: Tuesday, November 28, 2017, 10:41 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark