அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் கூட்டணியில் உருவான புதிய ஹைப்பர் கார் அறிமுகம்!

Written By:

உயர் வகை கார் தயாரிப்பில் புகழ்பெற்ற அஸ்டன் மார்ட்டின் நிறுவனமும், மோட்டார் பந்தய உலகில் பிரபல நிறுவனமான ரெட்புல் ரேஸிங் அணியும் புதிய ஹைப்பர் கார் ஒன்றை உருவாக்க இருப்பதாக அண்மையில் தெரிவித்தது. இரு ஜாம்பான்கள் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய ஹைப்பர் கார் குறித்து உலக அளவில் கார் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் உறவில் மலர்ந்த புதிய ஹைப்பர் கார்!!

இந்த நிலையில், கனடா நாட்டில் துவங்கியிருக்கும் வாகன கண்காட்சியில், இந்த கூட்டணி உருவாக்கி இருக்கும் புதிய ஹைப்பர் கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அஸ்டன் மார்ட்டின் ஏஎம்-ஆர்பி 001 என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படுகிறது.

அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் உறவில் மலர்ந்த புதிய ஹைப்பர் கார்!!

அஸ்டன் மார்ட்டின்- ரெட்புல் ரேஸிங் அணி உருவாக்கி உள்ள இந்த காருக்கான பல முக்கிய பாகங்களை உலகின் பல்வேறு பிரபல வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொடுத்துள்ளன.

அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் உறவில் மலர்ந்த புதிய ஹைப்பர் கார்!!

ஃபார்முலா-1 கார் வடிவமைப்பில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், ரெட்புல் ரேஸிங் அணியின் வடிவமைப்புப் பிரிவு தலைவருமான அட்ரியன் நியூவே இந்த காரை வடிவமைத்துள்ளார். மிகவும் தனித்துவமான வடிவமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் உறவில் மலர்ந்த புதிய ஹைப்பர் கார்!!

இந்த ஹைப்பர் கார் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும் ஹைப்ரிட் வகை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் காஸ்வொர்த் நிறுவனம் தயாரித்து கொடுத்திருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் உறவில் மலர்ந்த புதிய ஹைப்பர் கார்!!

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் பிரபலமான குரோஷியாவவை சேர்ந்த ரிமாக் நிறுவனம் இந்த காருக்கான பேட்டரியை தயாரித்து கொடுத்துள்ளது. இந்த காருக்கான கியர்பாக்ஸை ரிகார்டோ நிறுவனம் வழங்கி உள்ளது. இசியூ கம்ப்யூட்டரை பாஷ் நிறுவனமும் பிரத்யேகமாக உருவாக்கி கொடுத்துள்ளது.

அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் உறவில் மலர்ந்த புதிய ஹைப்பர் கார்!!

இந்த காருக்கான கார்பன் ஃபைபர் உடற்கூடு கனடா நாட்டை சேர்ந்த மல்டிமேக் நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஹைப்பர் கார் கனடா நாட்டு ஆட்டோஷோவில் அறிமுகம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம்.

அஸ்டன் மார்ட்டின் - ரெட்புல் உறவில் மலர்ந்த புதிய ஹைப்பர் கார்!!

அடுத்த ஆண்டு தனது புதிய ஹைப்பர் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அஸ்டன் மார்ட்டின் திட்டமிட்டுள்ளது. அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த கார் மாடலாக இது வர இருப்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
The Aston Martin Red Bull AM-RB 001 has made its debut on the Auto Show circuit. The AM-RB 001 is designed by Red Bull Racing Technical Director Adrian Newey.
Story first published: Saturday, February 18, 2017, 10:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark