இந்தியாவில் ரூ.54.02 லட்சம் ஆரம்ப விலையில் ஆடியின் புதிய ஏ5 கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

Written By:

ஆடியின் ஏ5 கார் இந்தியாவில் ரூ.54.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இவற்றுடன் ஏ5 வரிசைக்கு கீழ், ஏ5 கேப்ரியோலட் மற்றும் எஸ்5 ஸ்போர்ட்பேக் வெர்ஷன்களையும் ஆடி வெளியிட்டுள்ளது.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!
ஆடி ஏ5 வேரியண்டுகள் விலை
ஏ5 ஸ்போர்ட்ஸ்பேக் ரூ. 54.02 லட்சம்
ஏ5 கேப்ரியோலட் ரூ. 67.51 லட்சம்
எஸ்5 ஸ்போர்ட்பேக் ரூ. 70.60 லட்சம்
Recommended Video - Watch Now!
Datsun rediGO Gold 1.0-Litre Launched In India | In Tamil- DriveSpark தமிழ்
ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏ5 செடான் மற்றும் ஏ5 கேப்ரியோலட் மாடல்களின் தோற்றம் மற்றும் அம்சங்கள் பார்க்க ஒன்றாகத்தான் தெரியும். இரண்டு கார்களிலும் பான்னட் அறுகோண வடிவில் கிரில் அமைப்பில் உள்ளது.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் எல்.இ.டி பகல்நேர விளக்குகளுடன் அதே எல்.இ.டி திறன் பெற்ற முகப்பு விளக்குகள் இந்த இரண்டு கார்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் கார் ஏ5 காரில் உள்ள ஸ்போர்டியர் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரின் வெளிப்புற கட்டமைப்பில் பவர் டூம் ஹூடு, தோள்பட்டை அலை வடிவமைப்பு வரி போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

பிளேட்டினம் சாம்பல் நிறத்திலான ஒற்றை சட்ட நேர் வடிவிலான க்ரில் எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் உள்ளன. சாட்டின் ஃபினிஷ் கொண்ட விங் மிரர்ஸ்,

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

எல்.இ.டி முகப்பு விளக்குகள் மற்றும் 3டி எல்.இ.டி டெயில் விளக்குகள் போன்றவை இந்த காரின் வெளித்தோற்றத்திற்கு மேலும் பொலிவூட்டுகின்றன.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆடி ஏ5 காரின் உள்கட்டமைப்பில் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், கேபினில் கருப்பு நிற மர டிரிம், எம்.எம்.ஐ இன்ஃபொடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் மெய்நிகர் காக்பிட்டுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்றவை இடம்பெற்றுள்ளன.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இவற்றுடன் கூடுதலாக ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோவை சப்போர்ட் செய்யும் ஆடியின் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் தொகுப்பும் இடம்பெறவுள்ளது.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஒலப்சென் ஆடியோ சிஸ்டம் பெற்றுள்ள இந்த ஸ்போர்ட்பேக் வெர்ஷன் காரில் சன்ரூஃப் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏ5 ஸ்போர்ட்பேக் மற்றும் கேப்ரியோலட் மாடல் கார்களில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. இதன் மூலம் 197 பிஎச்பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த இரண்டு கார்களுமே 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. மேலும் ஏ5 ஸ்போர்ட்பேக் மற்றும் கேப்ரியோலட் கார்கள் 4 வீல் டிரைவிங் முறையை கொண்டது.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இதன்மூலம் 349 பிஎச்பி பவர் மற்றும் 500 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

4 வீல் டிரைவிங் முறையில் இயங்கும் இந்த காரில் 6-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார், துவக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை 4.7 விநாடிகளில் எட்டி பிடிக்கும். அதேபோல ஏ5 கேப்ரியோலட் மற்றும் செடானின் திறன் 7.9 விநாடிகளுக்குள் அடங்கும்.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏ5 கேப்ரியோலட் கார் சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் சி 300 கேப்ரியோலட் மாடலுக்கு போட்டியாகவும்,

ஏ5 ஸ்போர்ட்பேக், பிஎம்டபுள்யூ 3 சிரீஸ், மெர்சிடிஸ் சி-கிளாஸ் மற்றும் வால்வோ எஸ்60 கார்களுக்கு போட்டியாகவும் அமையும்.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவில் எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல் கார் மெர்சிடிஸ்-பென்ஸ் சி43 ஏஎம்ஜி மற்றும் வால்வோ எஸ்60 போல்ஸ்டார் கார்களுக்கு போட்டியாக உள்ளது.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஏ4 மற்றும் ஏ6 கார்களுக்கு பிறகு ஒரு அப்டேட்டை விரும்புபவர்களுக்கு ஏ5 காரை ஆடி சிறப்பாக தயாரித்துள்ளது. அதேபோல சிறந்த மோட்டரிங் அனுபவத்திற்கு இதில் கேப்ரியோலட் தயாராகவுள்ளது.

ஆடியின் புதிய ஏ5 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் மிகுந்த செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் அதிக கவனம் பெறுகிறது.

தற்போதைய இந்த புதிய வரவில் அனைவருக்கும் ஏற்ற விதமாக ஆடி ஏ5 புதிய சிரீஸ் கார்கள் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும்... #ஆடி #audi
English summary
Read in Tamil: Audi India has also launched the A5 Cabriolet and the S5 Sportback versions under the A5 lineup. Click for More...
Story first published: Friday, October 6, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark