ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை.. 7 லட்ச ரூபாய் வரை அதிரடி விலை குறைப்பு..!

Written By:

வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமலாக உள்ளது. இதன் மூலம் கார்களின் விலை கணிசமாக குறைய இருக்கிறது.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

எனினும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை தொடர்ந்து தற்போதுள்ள ஸ்டாக்குகளின் மீது அதன் தாக்கம் இருக்குமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லாததால் தற்போதே கார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

இந்த வகையில் இந்தியாவின் முன்னணி சொகுசுக் கார் நிறுவனமான ஆடி, தன்னுடைய கார் மாடல்கள் மீது அதிரடி விலை குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது. அந்நிறுவனம் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை சலுகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

இந்த அதிரடி விலை குறைப்பின்படி எந்தெந்த கார் மாடல்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

ரூ.32.30 லட்சம் விலை கொண்ட ஆடி ஏ3 பிரீமியம் பிளஸ் டிடிஐ டீசல் கார், தற்போது ரூ.29.99 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இதுவே ஆடி நிறுவனத்தின் தொடக்க விலை கொண்ட டீசல் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

இதே போல ஆடி ஏ4, ஏ6 மற்றும் க்யூ3 கார்களின் விலையில் தற்போது 6 லட்ச ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

இதில் அதிகபட்சமாக ஆடி ஏ6 டீசல் காரின் விலையில் அதிகபட்சமாக 7 லட்ச ரூபாய் சலுகை அளிக்கப்படுகிறது.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

இதேபோல க்யூ3 எஸ்யூவி காருக்கு 4 லட்ச ரூபாய் சலுகை அளிக்கப்படுகிறது. என்றாலும் பெரிய எஸ்யூவிக்களான க்யூ5 மற்றும் க்யூ7 கார்களுக்கு சலுகை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி கார் வாங்க விரும்புவர்களுக்கு ஜாக்பாட் சலுகை அறிவிப்பு..!

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வரும் ஜூலை1 முதல் அமலாவதயொட்டி ஏற்கெனவே பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about Audi announces discount for car models upto 7 lakh rupees.
Story first published: Monday, June 12, 2017, 13:59 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark