இந்தியாவில் அறிமுகமானது புதிய ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார்

Written By:

இந்திய சொகுசு கார் சந்தையில் கோலோய்சி வரும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ள முனைப்பு வரும் ஆடி நிறுவனம் க்யூ சீரீஸில் தனது முதல் பெட்ரோல் எஸ்யூவி காரான, புதிய ஆடி க்யூ3 பெட்ரோல் வேரியண்டை தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

2007 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆடி நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் தான் இயந்திரவியல் மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்ட க்யூ3 கிராஸ் ஓவர் டீசல் காரை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அதன் பெட்ரோல் வேரியண்ட் காரும் அறிமுகமாகியுள்ளது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

சிறந்த ஏரோடைனமிக்ஸ் அமைப்பு கொண்டதாக ஆடி கார்கள் விளங்குகின்றன. ஸ்டைலிங்கை பொருத்தவரையிலும் டீசல் வேரியண்டைப் போலவே இந்த புதிய க்யூ3-யும் உள்ளது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

டீசல் வேரியண்டில் உள்ளதைப் போன்றே புதிய க்யூ3 பெட்ரோல் எஸ்யூவியில், ஆல்வீல் டிரைவிங் சிஸ்டம் கொடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. இதில் ஃபிரண்ட் வீல் டிரைவ் மட்டுமே கிடைக்கிறது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

இந்த புதிய ஆடி க்யூ3 காரில் 17 இஞ்ச் அலாய் வீல்கள், வேகத்தை சீராக வைத்திருக்க உதவும் ‘க்ரூஸ் கண்ட்ரோல்', பனோரமிக் சன் ரூஃப் வசதி, எல்ஈடி முகப்பு விளக்குகள் மற்றும் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் வெவ்வேறு தட்பவெப்பத்தை மாற்றியமைத்துக் கொள்ள உதவும் ‘ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்' வசதி உள்ளது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

வெளிப்புறத்தை போலவே உட்புறத்திலும் அனைத்து வசதிகளும் டீசல் வேரியண்டை போலவே இருந்தாலும் இதன் கேபின் மட்டும், முழுக்கவே பிரவுன் நிற வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

ஏ3 கேப்ரியோலட் காரில் உள்ள இஞ்சின் இந்த க்யூ3 பெட்ரோல் வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1.4 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 150 பிஎஸ் ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

புதிய க்யூ3 கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் அடைந்துவிடுகிறது. இது அதிகபட்சமாக மணிக்கு 230 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. க்யூ3 கார் லிட்டருக்கு 16.9 கிமீ மைலேஜ் தரும் என ஆடி நிறுவனம் கூறுகிறது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

6 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட்/டிசண்ட் அஸிஸ்ட், கலர் இன்ஃபர்மேஷன் டிஸ்பிளே, வாய்ஸ் ரெகஜ்னைஷன், எல்ஈடி இண்டீரியர் லைட்டிங், லெதர் சீட்கள் உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

புதிதாக அறிமுகமாகியுள்ள ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி ரூ.32.2 லட்சம் ( எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்ற விலையில் கிடைக்கிறது. முன்னதாக வெளியிடப்பட்ட இதன் டீசல் வேரியண்டுகள் ரூ. 34.2 லட்சம் முதல் ரூ.37.2 லட்சம் என்ற விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி கார் அறிமுகம்

ஆடி க்யூ3 பெட்ரோல் எஸ்யூவி இந்த செக்மெண்டில் உள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கார்களுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
audi introduces new q3 petrol variant in india
Please Wait while comments are loading...

Latest Photos