Subscribe to DriveSpark

இந்தியாவில் ஆடியின் கியூ7 பெட்ரோல் மாடல் கார் ரூ.67.76 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது..!!

Written By:

இந்தியாவில் ஆடியின் கியூ7 எஸ்.யூ.வி காரின் புதிய பெட்ரோல் வேரியண்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
புதிய ஆடி கியூ7 பெட்ரோல் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

பேன் இந்தியா எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ.67.76 லட்சம் விலையில் அறிமுகமாகி உள்ள ஆடி கியூ7 பெட்ரோல் வேரியண்ட் காரில் புதிய 2.0 டி.எஃப்.எஸ்.ஐ எஞ்சின் உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

டர்போசார்ஜிடு ஃபோர் சிலிண்டர் கொண்ட இந்த எஞ்சின் ஆடி பெருமை கொள்ளும் விற்பனைகளை அளித்த பல்வேறு மாடல்களில் இடம்பெற்றுள்ளது.

புதிய ஆடி கியூ7 பெட்ரோல் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆடி கியூ7 புதிய பெட்ரோல் வேரியண்ட் காரில் பொருத்தப்பட்டுள்ள டி.எஃப்.எஸ்.ஐ எஞ்சின் மூலம் 248.5 பிஎச்பி பவர் மற்றும் 370 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

Recommended Video - Watch Now!
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

காரின் நான்கு சக்கரங்களுக்கும் எஞ்சின் ஆற்றலை எடுத்து செல்ல குவாட்ரோ ஆல்வில் டிரைவிங் நுட்பத்துடன் கூடிய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஆடி கியூ7 40 டி.எஃப்.எஸ்.ஐ கார் துவக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 6.9 விநாடிகளில் அடையக்கூடிய திறன் பெற்றது.

மைலேஜ்

மைலேஜ்

இந்தியாவில் சாலை சட்டத்திட்டங்களுக்கு ஏற்றவாறு காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 233 கி.மீ.

அராய் தேர்வுகளில் இருந்து கிடைத்த தரவுகளின் மூலம் புதிய கியூ7 டி.எஃப்.எஸ்.ஐ பெட்ரோல் வேரியண்ட் மாடல் லிட்டருக்கு 11.68 கி.மீ மைலேஜ் வழங்கும் என்று கூறுகிறது.

டிசைன் மற்றும் அம்சங்கள்

டிசைன் மற்றும் அம்சங்கள்

டீசல் வேரியண்ட்டின் உள்ள அதே வெளிப்புற தோற்றங்களை தான் கியூ7 பெட்ரோல் மாடல் காரும் கொண்டுள்ளது. கூர்மையான கோடுகளுடன் கூடிய மேட்ரிக்ஸ் எல்.இ.டி விளக்கு காரின் முன்பக்கத்தை அலங்கரிக்கிறது.

புதிய ஆடி கியூ7 பெட்ரோல் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

19- இஞ்ச் 5-ஸ்போக் அலாய் வீல்கள் காரின் மொத்த எடையையும் தாங்குகின்றன. காரின் ஏர் சஸ்பென்ஷன் இடம்பெற்றிருப்பது, இதன்மேல் ஒரு நம்பகத்தன்மையை விதைக்கிறது.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

கிரிக்கெட் லெதர் இருக்கைகளுடன், ஓக் கிரே இலேஸ், மின்சார இருக்கை வசதியமைப்பு, பின்பக்க கண்ணாடிகளில் சன்பிளைண்ட் மற்றும் ஃபோர் சோன் கிளைமேட்டிக் கண்ட்ரோல் ஆகியவை உள்ளன.

புதிய ஆடி கியூ7 பெட்ரோல் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இதுபோன்ற கவர்ந்திழுக்கும் அம்சங்கள் கொண்ட இந்த கார் 7-இருக்கைகள் கொண்ட மாடலாக தயாராகியுள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள்

தொழில்நுட்ப அம்சங்கள்

புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய மத்திய கன்சோல் பகுதியுடன் பொருத்தப்பட்ட டிஸ்பேள் உள்ளது. இதில் டிவிடி பிளேயர், பாஸ் 3டி சரௌண்ட் சிஸ்டம் மற்றும் 30 நிறங்களில் ஒளிரும் ஏம்பியண்ட் வண்ணம் போன்றவை உள்ளன.

ஸ்மோர்ட்போன்களை இந்த கன்சோலில் நாம் எந்தவித வையரின்றி இணைத்துக்கொள்ளும் வசதி பாராட்டத்தக்கதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

8 ஏர்பேகுகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஆடி ப்ரீ-சென்ஸ் ப்ரீடிக்டிவ் பாதுகாப்பு அமைப்பு, தானியங்கி பார்க்கிங் அமைப்பு, ரியர் வியூ கேமரா ,

புதிய ஆடி கியூ7 பெட்ரோல் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

டயர்கள் அழுத்தம் ஏற்படுவது தொடர்பாக கண்காணிக்கும் கருவி போன்ற ஆடி கியூ7 பெட்ரோல் வேரியண்ட் காரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களும் கவனமீர்க்கின்றன.

வரவேற்பு

வரவேற்பு

கியூ 7 டீசல் மாடல்களுக்கு இந்தியாவில் இருக்கும் வரவேற்பை உணர்ந்து அதை பெட்ரோல் வேரியண்டிலும் கொண்டு வந்திருப்பது ஆடிக்கு சாதகமாகவே அமையும் என ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

கியூ7 மாடலை பெட்ரோலில் வெளியிட காரணம்

கியூ7 மாடலை பெட்ரோலில் வெளியிட காரணம்

வோக்ஸ்வேகன் தயாரித்த டீசல் கார்கள் பல மாசு உமிழ்வு அதிகளவில் இருப்பதாக கூறி ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல உலகநாடுகள் அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசின.

புதிய ஆடி கியூ7 பெட்ரோல் மாடல் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்நிலையில் வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமான ஆடிக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது. இதை போக்கவே தற்போது ஆடி க்யூ7 காரில் பெட்ரோல் மாடலை தயாரித்துள்ளது.

மேலும்... #ஆடி #audi
English summary
Read in Tamil: Audi Q7 Petrol launched in India. Prices for the Audi Q7 40 TFSI start at Rs 67.76 lakh ex-showroom. Click for Details....
Story first published: Monday, September 4, 2017, 16:48 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark