இந்தியாவில் எஸ்.யூ.வி கார்களின் அரசன் என்ற பட்டத்தை மாருதியிடம் பறிக்கொடுத்த மஹிந்திரா..!!

Written By:

மஹிந்திரா & மஹிந்திரா, யுட்டிலிட்டி ரக வாகன தேவைகளில் இந்தியாவின் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிறுவனம். ஆனால், தற்போதைய காலாண்டிற்கான கணக்கு முடிவில் அந்நிறுவனம் விற்பனையில் வீழ்ச்சி கண்டுள்ளது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

மார்ச் மாதத்திற்கு பிறகான 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் மஹிந்திரா, யுட்டிலிட்டி ரக வாகன விற்பனையில் இதுவரை கைப்பற்றி இருந்த முதலிடத்தை மாருதி சுசுகி-க்கு விட்டுகொடுத்துள்ளது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

மாருதி எஸ்.யூ.வி விட்டாரா பிரிஸா கார், 2017 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெற்றுள்ளது.

இந்தியாவில் எஸ்.யூ.வி கார்களை விரும்பும் பெரும்பாலான பயனாளிகளை விட்டாரா பிரிஸா திருப்திப்படுத்தியதாகவே தெரிகிறது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

இந்திய ஆட்டோமொபைல் உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாருதியின் விட்டாரா பிரிஸா, எர்டிகா மற்றும் எஸ்-கிராஸ் ஆகிய மாடல் கார்கள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை சுமார் 57,125 எண்ணிக்கையில் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

இதனால் 2017 நிதியாண்டிற்காக காலாண்டு கணக்கு முடிவில் மாருதி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 30.05 சதவீத விற்பனை திறனை பெற்றுள்ளது.

மேலும் மஹிந்திரா 2017 நிதியாண்டிற்கான காலாண்டு கணக்கு முடிவில் 27.92 சதவீத விற்பனையை பெற்றுள்ளது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

இதே காலவரையோடு கடந்த 2016ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், மஹிந்திரா 31.62 சதவீத விற்பனை திறனை வைத்திருந்தது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை மஹிந்திராவிடம் இருந்த சுமார் 53,082 வாகனங்களை அது விற்க முடியவில்லை. மேலும் இந்த காலக்கட்டத்தில் மாருதியின் விற்பனை முற்றிலும் நேர்மாறாக அபாரமாக இருந்தது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

விட்டார பிரிஸா கார் வெளியான நாள் முதல் இந்தியாவில் சுமார் 1.45 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளன.

இதன் மூலம் யுட்டிலிட்டி வாகனங்களுக்கான சந்தையில் விட்டரா பிரிஸா மட்டுமே தற்போது வரை விற்பனையில் நம்பர் 1.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

விட்டரா பிரிஸா எஸ்.யூ.வி காரின் விற்பனை காரணமாக 2017 நிதியாண்டிற்கான காலாண்டு கணக்கு முடிவில் மொத்தமாக 7.7 சதவீத வளர்ச்சியை மாருதி சுசுகி அடைந்துள்ளது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

ஜிஎஸ்டி-யின் தாக்கமும் மாருதி சுசுகி-யின் தயாரிப்புக்கு பெரிய வரவேற்பை தான் அளித்துள்ளன.

ஜிஎஸ்டி-யை எதிர்கொள்ள துரிதமான செயல்பாடடோடு, சரியான திட்டமிடலுடன் வாடிக்கையாளர்களை அது தக்கவைத்துக்கொண்டது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

இதன் காரணமாக ஜிஎஸ்டி அமலாக்கம் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு பெரிய பின்னிடைவை வழங்கவில்லை. மேலும் அது விட்டாரா பிரிஸா காருக்கும் வரவேற்பை தான் கொடுத்தது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

எஸ்.யூ.வி சந்தைக்கான களமாக இந்தியா மாறிவருகிறது என்பதை பெரும்பாலான நிறுவனங்களை விட மாருதி சுசுகி முன்னரே தெரிந்து வைத்திருந்தது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

அதனால் தான் தேவைகளுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட விட்டாரா பிரிஸா எஸ்.யூ.வி கார் இந்தியாவில் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது.

மாருதி சுசுகி: எஸ்.யூ.வி கார் விற்பனையில் முதலிடம்..!!

எஸ்.யூ.வி காருக்கான இந்தியக் களத்தை மாருதி சுசுகி-க்கு பிறகு டாடா மற்றும் ஹூண்டாயும் கணித்து வைத்திருக்கிறது.

டாடா நெக்ஸன் என்ற மாடலை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இது நிச்சயம் மாருதி சுசுகியின் எஸ்.யூ.வி கார் தயாரிப்புகளுக்கு போட்டியை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Read in Tamil: Mahindra Loses Top Utility Vehicle Manufacturer Crown to Maruti Suzuki India. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos