இந்தியளவில் விற்பனையில் புதிய சாதனை படைத்த பாரத் பென்ஸ்: விவரம் உள்ளே..!!

Written By:

பார்த் பென்ஸ் நிறுவனம் தயாரித்த ஐம்பதாயிரமாவது டிரக்கை ஹைதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளருக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் குறைவான வரலாற்றை கொண்டுள்ள பாரத் பென்ஸ், சத்தமேயில்லாமல் புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

கனரக வாகன உற்பத்தியில் இதுவரை 50,000 டிரக்குகளை இந்தியாவில் உருவாக்கி விற்பனை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

அந்நிறுவனம் தயாரித்த ஐம்பதாயிரமாவது 4928 டிடி டிரக்கை ஹைதராபாத்தை சேர்ந்த வாடிக்கையாளருக்கு விற்றவுடன் பாரத் பென்ஸ் இந்த சாதனை குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

2011ம் ஆண்டில், இந்தியாவில் கனரக வாகன உற்பத்தியில் தனது பயணத்தை தொடங்கியது பாரத் பென்ஸ்.

நிறுவனத்தை கட்டமைத்த சிறிய காலத்திலேயே கனரக வாகன உற்பத்தியில் தன்னுடைய நிபுணத்துவத்தை அது காட்ட துவங்கியது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

2014ம் ஆண்டில் பாரத் பென்ஸ் மொத்தம் 10,000 டிரக்குகளை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்து அதை சாதனையாக அறிவித்தது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

இதை தொடர்ந்து இந்தியளவில் பாரத்பென்ஸ் உற்பத்திக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கனரக வாகன துறையில் இதனுடைய தேவை அதிகமானது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

கனரக வாகனங்களுக்கான பயன்பாட்டில் அனைத்து வித தேவைக்கும் வாகனங்கள் தயாரிக்கப்பட்டன.

மேலும் வாடிக்கையாளரின் தேவைக்கு தகுந்தபடி, டிரக்குகளை அப்டேட் செய்வதிலும் இது கில்லியாக உள்ளது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

பாரத்பென்ஸ் தயாரிக்கும் டிரக்குகள் அனைத்தும் இந்தியாவில் எந்த மூலையில் இருந்து வாங்கலாம், சர்வீஸ் செய்யலாம்.

வாடிக்கையாளரின் தேவைகளை கருதி இயங்குவதால், 2ம் தர மற்றும் 3ம் தர நகரங்களில் கூட பாரத்பென்ஸ் கிளை அமைத்தது.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

இந்தியாவில் கமர்ஷியல் வாகனங்களுக்கான சந்தையில் தன்னை சரியாக அடையாளம் காட்டி, 5 ஆண்டுகளில் 50,000 டிரக்குகளை தயாரித்து விற்பனை செய்து,

சாதனை படைத்துள்ள பாரத் பென்ஸ் நிறுவனத்தின் உழைப்பு நிச்சயம் பாராட்ட பட வேண்டியது என டெய்ம்லரின் இந்திய பிரிவு தலைவர் எரிச் நெசல்ஹாஃப் கூறியுள்ளார்.

இந்தியாவில் விற்பனையில் பாரத்பென்ஸ் புதிய சாதனை..!!

இந்த சாதனை தாங்கள் எதிர்பார்த்தது தான் என்றும், பி.எஸ். 4 மாசு விதிகள் அறிமுகமானபோது கூட அதற்கேற்ற திட்டங்களை சரியாக கையாண்டதாகவும் பார்த் பென்ஸ் நிறுவனத்திற்கான விற்பனை மற்றும் மார்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ராஜாராம் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

English summary
BharatBenz Achieves 50,000 Truck Sales In India. Click For Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark