இந்தியாவில் ரூ.38.6 லட்சம் விலையில் பிஎம்டபுள்யூ 320டி ஸ்போர்ட் எடிசன் கார் அறிமுகம்..!!

Written By:

இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த 2017 பிஎம்டபுள்யூ 320டி காரின் ஸ்போர்ட்ஸ் எடிசன் தற்போது வெளியாகியுள்ளது.

செயல்திறன் மற்றும் சிறப்பம்சங்களில் இந்த கார் இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரிய கவனம் பெற்றுள்ளது.

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

இந்தியாவில் ரூ.37 லட்சம் விலையில் தொடங்கும் பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் கார்களில் புதிய ஸ்போர்ட் எடிசனை அந்நிறுவனம் இணைத்துள்ளது. இந்த காரை பிஎம்டபுள்யூ சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரிக்கிறது.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

இதற்கு முன்னர் பிஎம்டபுள்யூ வெளியிட்ட 320டி பிரெஸ்டீஜ் மாடலை போல் இல்லாமல், தனித்துவமாக தெரிய இந்த ஸ்போர்ட்ஸ் எடிசன் காரின் முன்பக்க கிரில் கிளாஸ் பிளாக் ஸ்டால்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

உட்புற வடிவமைப்புகளில் காரின் தோற்றத்துக்கு தகுந்தவாறான இருக்கைகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் ஷிஃப்ட் பேடல்களை கொண்டுள்ளது.

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

மேலும் மின்சார முறையில் இயங்கும் எலெக்ட்ரானிக் கிளாஸ் சன்ரூஃப், 250 வாட் பெற்ற 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்றவையும் காரின் உள்கட்டமைப்புகளில் இடம்பெற்றுள்ளது.

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

மற்ற நிறுவனங்களின் ஸ்போர்ட் மாடல் கார்களில் இல்லாத பார்க்கிங் அசிஸ்ட், ரியர் வியூ கேமரா, முன்பக்க இருக்கைகளில் மெமரி கார்டு போட்டுக்கொள்ள ஸ்லாட் போன்ற அம்சங்கள் புதிய பிஎம்டபுள்யூ 320டி ஸ்போர்ட் மாடல் காரில் உள்ளது.

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

4-சிலிண்டர் கொண்ட டீசல் மோட்டார் கொண்ட இந்த காரின் எஞ்சின் 190 பிஎச்பி பவர் மற்றும் 400 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

கவர்ந்திழுக்கும் செயல்திறனை வழங்கும் பிஎம்டபுள்யூ 320டி ஸ்போர்ட்ஸ் காரின் எஞ்சின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

பிஎம்டபுள்யூ 3 சிரீஸ் மாடலில் புதிய ஸ்போர்ட் எடிசன் கார்..!!

துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ 7.2 நொடிகளில் அடையும் இந்த கார் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது.

மைலேஜ் சார்ந்த தேவைகளில் இந்த கார் ஒரு லிட்டருக்கு 22.69 கிலோ மீட்டர்களை தரும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
Read in Tamil: BMW 320d Edition Sport Launched in India, priced at Rs 38,60,000 ex-showroom. Click for Details...
Story first published: Tuesday, August 8, 2017, 11:24 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos