பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

பிஎம்டபிள்யூ 330ஐ க்ரான் டூரிஷ்மோ காரின் எம் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பிஎம்டபிள்யூ 330ஐ க்ரான் டூரிஷ்மோ காரின் எம் ஸ்போர்ட் மாடலில் பல கூடுதல் ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பிஎம்டபிள்யூ எம்3 காரில் இருப்பது போன்ற புதிய பம்பர்கள் முன்புறத்திலும், பின்புறத்திலும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. சைடு ஸ்கர்ட்டுகள் இந்த காரின் கவர்ச்சியை கூட்டுகிறது.

 பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

சாதாரண பிஎம்டபிள்யூ 330ஐ க்ரான் டூரிஷ்மோ மாடலில் மேட் ஃபினிஷ் கருப்பு வண்ண முன்புற க்ரில் அமைப்பு இருக்கும் நிலையில், இந்த புதிய எம் ஸ்போர்ட் மாடலில் புதிய கருப்பு வண்ண சிறுநீரக வடிவ க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 330ஐ க்ரான் டூரிஷ்மோ எம் ஸ்போர்ட் காரில் 18 அங்குல எம் ஸ்போர்ட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த அலாய் வீல்களும் எம்3 காரில் இருப்பது போன்ற வடிவமைப்பை பெற்றிருக்கிறது.

Recommended Video

[Tamil] Jeep Compass Launched In India - DriveSpark
 பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்திலும் மாற்றங்கள் இருக்கின்றன. முன்புறத்தில் ஓட்டுனர் மற்றும் சக பயணிக்கு ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ஹெட்லைனர், புதிய ஸ்டீயரிங் வீல் அமைப்பு, எம் பேட்ஜ் பொருத்தப்பட்ட டோர் சில் கார்டுகள் மற்றும் ஹெட் அப் டிஸ்ப்ளே ஆகியவை இதன் உட்புறத்தில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள்.

 பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், இந்த காருக்கு விதவிதமான விசேஷ இன்டீரியர் கஸ்டமைஸ் ஆப்ஷன்களையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்குகிறது. இது காரின் இன்டீரியரை மேலும் பிரிமியமாக மாற்றும்.

 பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுகக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.

 பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பஞ்சரானாலும் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்கும் ரன் ஃப்ளாட் டயர்கள், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் சிஸ்யம், ரியர் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

 பிஎம்டபிள்யூ 330ஐ ஜிடி எம் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார் அல்பைன் ஒயிட் மற்றும் எஸ்டோரில் புளூ என்ற இருவிதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ரூ.49.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
BMW 330i Gran Turismo M Sport launched in India. The new BMW 330i Gran Turismo M Sport is priced at Rs 49.40 lakh (Ex-showroom India).
Story first published: Saturday, October 21, 2017, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X