மெர்சிடிஸிற்கு பி.எம்.டபுள்யூ வாழ்த்து, டிரெண்டான வாழ்த்தின் மறைமுக அர்த்தம்..!!

Written By:

சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான மெர்சிடிஸ் மற்றும் பிஎம்டபுள்யூ தொழில்ரீதியாக போட்டிப்போட்டுக் கொண்டாலும், பரஸ்பர நிகழ்வுக்காக அந்நிறுவனங்கள் இரண்டும் கைக்குலுக்கி கொண்டுள்ளன.

ஆட்டோமொபைல் துறையில் அகவை 50 காணும் மெர்சிடிஸ்!

இந்தாண்டில் மெர்சிடிஸ் நிறுவனம் ஆட்டோமொபைல் துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. அதற்காக பி.எம்.டபுள்யூ தனது வாழ்த்தை அந்நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் அகவை 50 காணும் மெர்சிடிஸ்!

ஜெர்மனியில் கடந்த வாரத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயம் நர்பர்கிரிங்கிங் பகுதியில் நடைபெற்றது. இதில் மெர்சிடிஸ் மற்றும் பி.எம்.டபுள்யூ நேரடி போட்டியாளர்களாக களமிறங்கின.

ஆட்டோமொபைல் துறையில் அகவை 50 காணும் மெர்சிடிஸ்!

அந்த நிகழ்வின் போது

"நீங்கள் கேக்கை ஆர்டர் செய்தீர்கள், அதை நாங்கள் டோனெட்ஸாக மாற்றினோம். மெர்சிடிஸின் 50 ஆண்டு ஏனிவெர்ஸறிக்கு வாழ்த்துக்கள்" என பி.எம்.டபுள்யூ தனது பதாகையில் மெர்சிடிஸிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.

ஆட்டோமொபைல் துறையில் அகவை 50 காணும் மெர்சிடிஸ்!

டோனெட்ஸ், கேக் என்று உவமைகள் பல இருந்தாலும், டோனெட்ஸ் என்பதை சாலையில் ஓடும் டயராக தனது வாசகத்தில் பி.எம்.டபுள்யூ குறிப்பிட்டுள்ளது பின்னர் புரிந்துக்கொள்ளப்பட்டது.

பிஎம்டபுள்யூ இப்படி வேடிக்கையாக வாழ்த்து கூறுவதற்கு மெர்சிடிஸ் நிறுவனமே காரணம்.

ஆட்டோமொபைல் துறையில் அகவை 50 காணும் மெர்சிடிஸ்!

பி.எம்.டபுள்யூ ஆட்டோமொபைல் துறையில் தனது நூறு ஆண்டுகளை நிறைவு செய்தபோது, இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அதற்கு ஒரு வாழ்த்து கூறியிருந்தது.

மெர்சிடிஸ் நிறுவனம் பி.எம்.டபுள்யூவிற்காக தெரிவித்திருந்த அந்த வாழ்த்தில், நூறு ஆண்டுகள் காணும் பி.எம்.டபுள்யூவிற்கு வாழ்த்துக்கள்,

ஆனால் முந்தையை 30 ஆண்டுகள் மிகவும் சலிப்பு ஏற்படுத்தும் நாட்களாக இருந்தது என அந்த விடியோவை வேடிக்கையாக கூறி மெர்சிடிஸ் முடித்தது.

ஆட்டோமொபைல் துறையில் அகவை 50 காணும் மெர்சிடிஸ்!

பி.எம்.டபுள்யூ-வின் எம் சிரீஸ் கார்கள் மிகவும் பரபரப்பான விற்பனையை உலகளவில் பெற்றுள்ளது. அதை குறிப்பிட்டு 'எம்' என்ற வார்த்தை உலகளவில் சக்தி வாய்ந்தது என மெர்சிடிஸிற்கான வாழ்த்து செய்தியில் பி.எம்.டபுள்யூ குறிப்பிட்டு இருந்தது.

ஆட்டோமொபைல் துறையில் அகவை 50 காணும் மெர்சிடிஸ்!

இதன்மூலம் மெர்சிடிஸை புகழ்வதோடு மட்டுமில்லாமல், பி.எம்.டபுள்யூ நேரடியாக தனது அடுத்த தொழில்போட்டி நிறுவனமான ஆடி-க்கு நேரடி சவால் விடுப்பது போல இருந்தது.

English summary
BMW M Congratulates Mercedes-AMG On 50th Anniversary Witha an Interesting Touch. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark