திருநெல்வேலியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தரிசனம்... மிஸ் பண்ணிடாதீக!!

Written By:

முதல்நிலை, இரண்டாம் நிலை நகரங்களை தாண்டி, மூன்றாம் மற்றும் நான்காம் நிலை நகரங்களிலும் வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகளை பிஎம்டபிள்யூ கார் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதற்காக, சில புதுமையான முயற்சிகளை அந்த நிறுவனம் கையாண்டு வருகிறது.

திருநெல்வேலியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தரிசனம்!!

அதன்படி, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களை கவர்வதற்கும், தனது கார்களை பிரபலப்படுத்தும் விதமாகவும் மொபைல் ஸ்டூடியோ என்ற பெயரில் தற்காலிக ஷோரூம்களை ஏற்படுத்தி, அதில் கார்களை பார்வைக்கு வைத்து வருகிறது பிஎம்டபிள்யூ கார் நிறுவனம்.

திருநெல்வேலியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தரிசனம்!!

அதன்படி, இன்றும், நாளையும் திருநெல்வேலியில் உள்ள ரஹமத் நகரில் உள்ள ஓட்டல் வைரமாளிகை அருகில் அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஷோரூமில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிரபல சொகுசு கார் மாடல்கள் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தரிசனம்!!

மொபைல் ஸ்டூடியோ என்ற இந்த நடமாடும் ஷோரூமில் இரண்டு பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மொபைல் ஸ்டூடியோவில் வரவேற்பு பகுதி, வாடிக்கையாளர்களுக்கான விஐபி லவுன்ச் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. பிற கார் மாடல்களும் அதே பகுதியில் காட்சிக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தரிசனம்!!

இந்த ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு போதிய தகவல்களை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகுதியுடைய வாடிக்கையாளர்கள் பிஎம்டபிள்யூ சொகுசு எஸ்யூவி வகை கார்களையும், செடான் கார்களையும் ஓட்டி பார்ப்பதற்கான வாய்ப்பை பெற முடியும்.

திருநெல்வேலியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தரிசனம்!!

இந்த ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கார்களை பற்றிய தொழில்நுட்ப விபரங்கள், சொகுசு வசதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சிறப்பாக அளிப்பதற்காக அனுபவமிக்க விற்பனை பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் தரிசனம்!!

இந்த நிலையில், நாட்டிலுள்ள மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை நகரங்கள் அனைத்திற்கும் மொபைல் ஸ்டூடியோ ஷோரூமை கொண்டு செல்வதற்கு பிஎம்டபிள்யூ கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக,தனது வர்த்தகம் இந்தியாவில் சிறப்பான வளர்ச்சியை பெறும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்கள்!

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

English summary
The BMW mobile studio is a one-of-a-kind mobile showroom which has been specially designed to showcase the most aspirational BMW products and services.
Story first published: Saturday, February 11, 2017, 13:43 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos