புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 காரின் பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்..!

By Arun

சொகுசுக் கார் விற்பனையில் ஆடி நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், அதன் ஆரம்ப ரக எஸ்யூவியான எக்ஸ்1 காரின் பெட்ரோல் வேரியண்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 காரின் பெட்ரோல் வேரியண்ட் இதன் டீசல் வேரியண்ட் போலவே இருக்கிறது. இந்தக் கார் எக்ஸ்-லைண் என்ற ஒரே வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இந்த புதிய காரை ‘எஸ்-டிரைவ்20ஐ' என்று என்ற பெயரில் வகைப்படுத்தியுள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

புதிய எக்ஸ்-1 காரின் முன்புற பம்பர், மேட் ஃபினிஷ் சில்வர் நிறத்தில் உள்ளது. முகப்பில் உள்ள கிட்னி வடிவ கிரில், மேட் அலுமினியம் நிறத்தில் வண்ணம் பெற்றுள்ளது. அதே போல ஏர் இண்டேக் பகுதி கருப்பு மேட் நிற பினிஷிங் பெற்றுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

காரின் பெரும்பாலான பகுதிகள் அலுமினியம் மற்றும் கருப்பு நிற மேட் பினிஷிங் பெற்றுள்ளது. அதில் பின்புற பம்பர், டோர் சில் மற்றும் டிவின் எக்ஸாஸ்ட் பைப்புகளும் அடங்கும்.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

காரின் உட்புறத்தில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் டூயல் சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி வசதி, பனோரமா கிளாஸ் ரூஃப், புட்வெல் விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

மேலும், கருப்பு நிற ஸ்டிச்சிங்குடன் கூடிய மல்டி பங்ஷனல் ஸ்போர்ட் லெதர் ஸ்டீரிங் வீல் கவர்ச்சிகரமாக உள்ளது. மாெத்தத்தில் உட்புறம் மிகவும் நேர்த்தியாகவும், கவர்ச்சிகரமான அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

காரின் முக்கிய அம்சங்கள் கீழ்க்கண்டவாறு...

 • இதில் புளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் ரியர் வியூ கேமராவுடன் கூடிய 16.5 செமீ டிஸ்பிளே கொண்ட ஐ-டிரைவ் சிஸ்டம்
 • 6 ஏர் பேக்குகள்
 • பிரேக் அஸிஸ்டுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
 • கார்னரிங் பிரேக் கண்ட்ரோல்
 • டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல்
 • டைனமிக் ட்ரேக்‌ஷன் கண்ட்ரோல்.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 காரில் 4 சிலிண்டர்கள் கொண்ட 2.0 லிட்டர் டர்போசார்ஜூடு பெட்ரோல் இஞ்சின் உள்ளது.

இது அதிகபட்சமாக 188 பிஹச்பி ஆற்றலையும், 280 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 7.7 வினாடிகளில் எட்டிப்பிடித்து விடுகிறது. இந்த கார் லிட்டருக்கு 16.30 கிமீ மைலேஜ் வழங்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் வேரியண்ட் கார் 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

 • ஆல்பைன் ஒயிட் (Alpine White)
 • பிளாக் சஃபயர் (Black Sapphire)
 • ஸ்பார்க்ளிங் பிரவுன் (Sparkling Brown)
 • மெடிடெரனியன் புளூ (Mediterranean Blue)
 • செஸ்ட்நட் பிரான்ஸ் (Chestnut Bronze).
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் கார் அறிமுகம்..!

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்-1 பெட்ரோல் வேரியண்ட் கார் ரூ.35.75 லட்சம் ( டெல்லி, எக்ஸ்ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கிறது.

Most Read Articles

English summary
Read in Tamil about BMW X1 Petrol variant launched in india. price, specs, colors and more
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X