இந்தியாவில் 2ம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை கைவிட்டது மாருதி சுஸுகி.... காரணம் இதுதான்..!!

இந்தியாவில் 2ம் தலைமுறை ஸ்விஃப்ட் காரை கைவிட்டது மாருதி சுஸுகி.... காரணம் இதுதான்..!!

By Azhagar

மாருதி சுஸுகி நிறுவனம், 2வது தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரை கைவிட முடிவுசெய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

இந்தியாவில் 2018ல் அறிமுகமாகும் புதிய ஸ்விஃப்ட் காருக்கு சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில், இந்த முடிவை மாருதி சுஸுகி அறிவித்துள்ளது.

ஸ்விஃப்ட் சீரிஸில் மூன்றாவது தலைமுறையாக வரவிருக்கும் புதிய மாடலுக்கு புக்கிங்ஸ் தொடங்கியுள்ளதாக மாருதி சுஸுகி கூறியுள்ளது.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

ரஷ்லேன் வெளியிட்டுள்ள செய்தியின் படி, பழைய ஸ்விஃப்ட் கார்கள் ஸ்டாக் உள்ளவரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

ஆனால் அந்த கார்களுக்கான ஸ்டாக் தீர்ந்துவிட்டால், புதிய தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார்களை தான் அவர்கள் தேர்வு செய்யவேண்டும்.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

இருப்பில் இருக்கும் பழைய ஸ்விஃப்ட் மாடல் கார் குறைந்துக்கொண்டே வரும் சூழலில், புதிய ஸ்விப்ஃட் காருக்கான உற்பத்தி பணிகளை மாருதி துரிதமாக தொடங்க வேண்டும்.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

அதன்படி, மாருதி சுஸுகி புதிய ரக கார்களை வெளியிடும் முன்பு, அதற்கான உற்பத்தியை குறைந்தது ஒரு மாதம் முன்பு தொடங்கிவிடுவது வழக்கம்.

நிலைமை இப்படியிருக்க, 3ம் தலைமுறைக்கான ஸ்விஃப்ட் கார் 2018 பிப்ரவரி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ளது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

இதன்காரணமாக புதிய மாடல் ஸ்விஃப்ட் காருக்கான உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி ஆரம்பத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

பழைய மாடல் ஸ்விஃப்ட் காரை தயாரித்து வரும் ஆலையை மாருதி சுஸுகி மாற்றியமைக்க உள்ளது. அதற்கான பணிகள் டிசம்பர் இறுதியில் தொடங்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

ஆலையை புதிய மாடல் காருக்கான அளவு மற்றும் வடிவமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தால் மட்டும் தான், 2018 ஸ்விஃப்ட் காரை அந்நிறுவனம் தடையின்றி உற்பத்தி செய்ய முடியும்.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

ஹார்டெக்ட் பிளாட்ஃபிராமின் கீழ் தயாராகியுள்ள புதிய ஸ்விஃப்ட் கார், மிகவும் இலகுவான அதே சமயத்தில் மிகவும் வலிமையான கட்டமைப்புகளை கொண்டது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

1.2 லிட்டர் கே-சிரீஸ் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் ஃபிளாட் மல்டிஜெட் டர்போசர்ஜிடு டீசல் என இருவேறு எஞ்சின் தேர்வுகளிலும் 2018 மாருதி ஸ்விஃப்ட் கார் தயாராகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

இந்த காரின் இரு எஞ்சின் தேர்வுகளும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை கொண்டு இருக்கும். ஆனால் இது வெளிவரும் சமயத்தில் கூடுதலாக 2018 ஸ்விஃப்ட் கார் பெட்ரோல், டீசல் தேர்வுகளில் ஏஎம்டி தேவையிலும் வெளிவரலாம்.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

தற்போதைய டிரென்டிற்கு ஏற்றவாறான வடிவமைப்புடன் காணப்படும் புதிய ஸ்விஃப்ட் கார், அதிக இடவசதி கொண்டு இருக்கும் என மாருதி சுஸுகி தரப்பில் சொல்லப்படுகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

தொழில்நுட்ப தேவைகளில் இந்த கார் புதிய ரக ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டியை ஏற்றுக்கொள்ளக்கூடிய இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்கும்.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

காரின் உட்புறங்களில் புதிய மாற்றியமைக்கப்பட்ட டாஷ்போர்டு மற்றும் நமக்கான பொருட்களை வைப்பதற்கான இடம் என பல்வேறு அம்சங்கள் பெற்றிருக்கும்.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

பெட்ரோல், டீசல் தேர்வுகளுடன் புதிய ஸ்விஃப்ட் காரில் ஹைஃபிரிட் மற்றும் ஸ்போர்ட் வேரியன்டுகளும் உள்ளடக்கிய ஒரு பெரிய சீரிஸை மாருதி சுஸுகி உருவாக்கி வருகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள புதிய ஸ்விஃப்ட் காரின் இந்த மொத்த சிரீயஸும் 2018 இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் இனி இல்லை- மாருதி சுஸுகி திட்டவட்டம்..!!

2018 ஆட்டோ எக்ஸ்போவில் பிரம்மாண்ட அறிமுகமாக வெளிவரும் புதிய ஸ்விஃப்ட் காருக்கு மாருதி சுஸுகி ரூ. 5 லட்சம் முதல் விலை நிர்ணயம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil: Book an Old Maruti Swift Car, Get the All new 2018 Swift. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X