டெஸ்ட் டிரைவ் செய்யப்படாமலே 250 புகாட்டி சிரோன் கார்கள் விற்பனை

மொத்தம் தயாரிக்கப்பட உள்ள 500 புகாட்டி சிரோன் கார்களில் 250 விற்பனை ஆகிவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான 'புகாட்டி', அதிவேக சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்கள் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்றது. புகாட்டி கார்கள் பல்வேறு கார் பந்தயங்களில் வெற்றி பெற்று ஆட்டோமொபைல் உலகில் தனித்துவம் வாய்ந்து விளங்குகின்றன.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

கடந்த ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் முதல் முறையாக சிரோன் காரை அறிமுகப்படுத்தியது புகாட்டி நிறுவனம். சிரோன் கார்கள் உலகிலேயே வேகத்திலும், விலையிலும் முதன்மையாக கருதப்படுகிறது. இதன் கான்செப்டை உருவாக்க பல ஆண்டுகள் கடினமாக உழைத்துள்ளது புகாட்டி நிறுவனம்.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

உலகிலேயே மொத்தமாக 500 சிரோன் கார்கள் தான் தயாரிக்கப்பட உள்ளன. இக்கார் ஒன்றை உருவாக்க 20 பேர் கொண்ட குழுவுக்கு 9 மாதங்கள் தேவைப்படுகிறது. இதுமட்டுமல்ல உற்பத்தி செய்யப்பட்ட காரை 50 பேர் கொண்ட குழு அனைத்து அம்சங்களையும் தீவிரமாக சோதித்துப் பார்த்துதான் டெலிவரிக்கு அனுப்பி வைக்கிறது.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

இந்த மாத இறுதியில் தான் சிரோன் கார்கள் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட இருப்பதாக புகாட்டி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் இதுவரை 250 கார்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது டெஸ்ட் டிரைவ் செய்யப்படாமலே பாதியளவு கார்களை விற்றுள்ளது புகாட்டி நிறுவனம்.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

புகாட்டி சிரோன் காரில் 4 டர்போசார்ஜர்கள் கொண்ட 8 லிட்டர் டபிள்யூ16 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 1,479 பிஹச்பி திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் மூலம் மணிக்கு அதிகபட்சமாக 420 கிமீ வேகத்தில் சிரோன் கார் செல்லும்.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

இக்கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடும். மேலும் 0 - 200 கீமீ வேகத்தை 6.5 வினாடிகளிலும், 0 - 300 கிமீ வேகத்தை 13.6 வினாடிகளிலும் அடையும்.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

சிரோன் காரின் அதிகபட்ச வேகம் 420 கிமீ என்று புகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது, எனினும், இதன் முழுமையான இஞ்சினின் ஆற்றல் மூலம் 463 கிமீ வேகத்தில் இக்காரில் பயணிக்கலாம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சிரோன் காரின் வேகத்தை கட்டுப்படுத்தியே தயாரித்துள்ளது புகாட்டி நிறுவனம்.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

சில தினங்களுக்கு முன்னர் 3 கார்களை டெலிவரி செய்யத் தயார் நிலையில் வைத்திருந்த புகாட்டி நிறுவனம் அதில் ஒன்றை ஐரோப்பிய வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவரி செய்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

கார்பன் ஃபைபர் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தனித்தனி சஸ்பென்ஷன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. மேலும் இவை ‘புகாட்டி வேரோன்' கார்களின் வழித்தோன்றலாக இருந்தாலும் அதையும்விட 300 பிஹச்பி அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது இதன் வலிமையை உணர்த்துகிறது.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

இத்தனை பெரிய வலிமை பொருந்திய புகாட்டி சிரோன் கார்கள் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் விலை கொண்டதாகும். 1.5 கோடி ரூபாயை வைப்புத்தொகையாக செலுத்திவிட்டு 9 மாதங்கள் இதன் டெலிவரிக்காக காத்திருக்க வேண்டும்.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

1955ஆம் ஆண்டு மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் பங்கேற்று உலகிலேயே அதிக வயதில் (55) ஃபார்முலா-1 கார் பந்தயங்களில் கலந்து கொண்டவர் என்ற சாதனை படைத்த ‘லூயிஸ் சிரோன்' என்பவரின் பெயரை இக்காருக்கு வைத்துள்ளது புகாட்டி நிறுவனம்.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

ஆண்டுக்கு சராசரியாக 70 சிரோன் கார்களை மட்டுமே உற்பத்தி செய்து டெலிவரி செய்யப்போவதாக புகாட்டி நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தான் சிரோன் கார்களுக்கு அதிகமான ஆர்டர்கள்

கிடைத்துள்ளன.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

சிரோன் கார்கள் ராயல் கார்பன், கருப்பு, கிரே, டர்க்யீஸ், நீலம், பிரவுன், பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களில் தயாரிக்கப்படுகிறது.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

பொதுவான கார்களில் ஒரே ஒரு ரேடியேட்டர் தான் இருக்கும், ஆனால் சிரோன் காரில் மொத்தமாக 10 ரேடியேட்டர்கள் உள்ளன. இது காரின் இஞ்சின் மட்டுமல்லாது, பிரேக் சிஸ்டம், டர்போ சிஸ்டம் மற்றும் பின்புற மெக்கானிக்கல் ஸ்பாய்லர் கருவியையும் வெப்பத்திலிருந்து காக்கிறது.

உலகின் அதிவேக புகாட்டி சிரோன் காருக்கு ஆர்டர்கள் குவிந்தன

சிரோன் கார்களின் உட்புறத்தை லெதர் கொண்டு புகாட்டி நிறுவனம் செதுக்கியுள்ளது. இதன் வெளிப்புறம் மற்ற எந்த ஸ்போர்ட்ஸ் கார்களும் போட்டியிட முடியாத அளவுக்கு அவ்வளவு அட்டகாசமாக உள்ளது. வேறு எந்த நிறுவனத்தின் கார்களும் புகாட்டி சிரோன் கார்களுக்கு போட்டியாக இல்லை என்பது இதன் தனித்துவத்தை பறைசாற்றுகிறது.

புகாட்டி வேரோன் 16.4 கிராண்ட் ஸ்போர்ட் விட்டீஸ் காரின் படங்கள் கீழே உள்ள கேலரியில் காணுங்கள்:

Most Read Articles
English summary
Bugatti has dispatched 250 units of the Chiron to the buyers. Half of the lot is still up for grabs.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X