புகாட்டி சிரோன் ஹைப்பர் காரின் மைலேஜ் விபரம் வெளியானது!

Written By:

உலகின் மிகவும் அதி சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட தயாரிப்பு நிலை கார் மாடல்களில் ஒன்று புகாட்டி சிரோன் கார். இந்த காரில் இருக்கும் 8.0 லிட்டர் க்வாட் டர்போ சார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.

 புகாட்டி சிரோன் காரின் மைலேஜ் விபரம் வெளியானது!

ஒவ்வொரு நாட்டிற்கும் விற்பனைக்கு செல்லும்போது, அந்த நாட்டின் விதிமுறைகளுக்கு ஏற்ப மாசு உமிழ்வு மற்றும் மைலேஜ் குறித்த சோதனைகள் நடத்தப்படுகிறது. அதுபோன்ற ஒரு சோதனைக்கு புகாட்டி சிரோன் காரை அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உட்படுத்தியது.

 புகாட்டி சிரோன் காரின் மைலேஜ் விபரம் வெளியானது!

இதில், புகாட்டி சிரோன் கார் ஒரு கேலன் எரிபொருளில் 11 மைல்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 3.82 கிமீ மைலேஜ் தருவதாகவும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 5.95 கிமீ மைலேஜ் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 புகாட்டி சிரோன் காரின் மைலேஜ் விபரம் வெளியானது!

இந்த காரில் 100 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் உயர்வகை ஆக்டேன் 98 எரிபொருளில் செல்கிறது. இந்த நிலையில், ஆறுதலான ஒரு விஷயமும் இந்த காரின் மைலேஜ் பற்றி வெளியாகி உள்ளது.

 புகாட்டி சிரோன் காரின் மைலேஜ் விபரம் வெளியானது!

அதாவது, புகாட்டி வேரான் காரைவிட புகாட்டி சிரோன் கார் கூடுதல் மைலேஜ் தருவதாக தெரியவந்துள்ளது. புகாட்டி வேரான் கார் லிட்டருக்கு 4.25 கிமீ கிமீ மைலேஜ்தான் செலல்லும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைவிட சிரோன் கூடுதல் மைலேஜ் தரும் என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

 புகாட்டி சிரோன் காரின் மைலேஜ் விபரம் வெளியானது!

புகாட்டி சிரோன் காரை வாங்குவோருக்கு மைலேஜ் என்ற விஷயம் பெரும் பொருட்டாக இருக்காது. இருப்பினும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் விஷயங்களை மனதில் வைத்து இந்த மைலேஜ் என்பது இங்கே முக்கியமானதாக பார்க்க வேண்டியிருக்கிறது.

 புகாட்டி சிரோன் காரின் மைலேஜ் விபரம் வெளியானது!

புகாட்டி நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒவ்வொரிடமும், சராசரியாக 84 கார்களும், 3 ஜெட் விமானங்களும், ஒரு ஆடம்பர படகும் இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

மேலும்... #புகாட்டி #bugatti
English summary
The US Environmental Protection Agency finally released the Chiron's mileage figures as per the Agency's testing criteria. The Chiron returned a combined mileage figure of 11 miles to the gallon (mpg) which translates to 4.67kpl averaging 9mpg (3.82kpl) in the city and 14mpg (5.95kpl) on the highway.
Story first published: Monday, July 31, 2017, 16:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark