டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

Written By:

பட்ஜெட் கார்களில் டட்சன் ரெடிகோ காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது இந்த கார் 800சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சற்று சக்திவாய்ந்த 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யபப்பட இருக்கிறது.

டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

வரும் 26ந் தேதி இந்த புதிய டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், இந்த காருக்கு முன்பதிவும் இன்று துவங்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் எஞ்சின்தான் இந்த காரிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு வருகிறது.

டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

இந்த காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இன்டெலிஜென்ட் ஸ்பார்க் ஆட்டோமேட்டட் டெக்னாலஜி என்ற நவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதன்மூலமாக, மிகச் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இந்த கார் லிட்டருக்கு 22.04 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

டட்சன் ரெடிகோ காரின் டி[O] மற்றும் எஸ் ஆகிய இரண்டு டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கும். கீலெஸ் என்ட்ரி, எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண இன்டீரியர் அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது.

 டட்சன் ரெடிகோ காரின் 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு முன்பதிவு ஆரம்பம்!

மாருதி ஆல்ட்டோ கே10 மற்றும் ரெனோ க்விட் 1.0 லிட்டர் எஞ்சின் மாடல்களுடன் இந்த டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல் போட்டி போடும். ரூ.3.75 லட்சம் முதல் ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #டட்சன் #datsun #hatchback
English summary
டட்சன் ரெடிகோ, டட்சன் கார், டட்சன் ரெடிகோ 1.0 லிட்டர் எஞ்சின் மாடல்
Please Wait while comments are loading...

Latest Photos