டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்!

புதுபிறவி எடுத்த டட்சன் பிராண்டின் வெற்றிகரமான மாடலாக ரெடிகோ கார் மாறியதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கடந்த ஆண்டு ஜூன் 7ந் தேதி டட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் முதல் அர்பன் க்ராஸ்ஓவர் ரக கார் மாடலாக நிலைநிறுத்தப்பட்ட டட்சன் ரெடிகோ காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில் ரூ.2.38 லட்சம் என்ற சவாலன விலையில் வந்த டட்சன் ரெடிோ கார் அனைத்து பகுதி வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. விலை மட்டுமின்றி, டட்சன் ரெடிகோ காரில் இடம்பெற்ற சிறப்பம்சங்களும் மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிகரமான காரணங்கள்

டட்சன் ரெடிகோ காருக்கு 5 ஆண்டுகள் அல்லது வரம்பு இல்லாத கிலோமீட்டர் தூரத்துக்கான கூடுதல் வாரண்டி காலம் வழங்கப்படுகிறது. வேறு எந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த திட்டத்தை வழங்கவில்லை.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிகரமான காரணங்கள்

மேலும், மிக குறைவான செலவீனம் கொண்ட கார் மாடலாகவும் டட்சன் ரெடிகோ கார் விளங்குகிறது. அதாவது, பிற கார்களின் செலவீனத்தை ஒப்பிடும்போது டட்சன் ரெடிகோ காருக்கான செலவீனம் 32 சதவீதம் வரை குறைவாக இருப்பதும் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், 24 மணிநேரத்திற்கான இலவச அவசர சாலை உதவி திட்டம், இலவச வாரண்டி மற்றும் கூடுதல் கால வாரண்டி உள்ளிட்டவையும் கூடுதல் மதிப்பையும் வழங்கும் விஷயமாக இருக்கும்.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிகரமான காரணங்கள்

ரெனோ க்விட் கார் போன்றே, இந்தியாவின் மிக அதிக மைலேஜை வழங்கும் பெட்ரோல் கார் என்ற பெருமையும் டட்சன் ரெடிகோ காருக்கு உண்டு. இந்த கார் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜை வழங்குகிறது. அதேநேரத்தில், நேர் போட்டியாளரான மாருதி ஆல்ட்டோ 800 கார் [லிட்டருக்கு 24.9 கிமீ/லி] மைலேஜை விட இது அதிகம். ஏனெனில், மைலேஜ் என்பதை இந்தியர்கள் மிக முக்கியமான விஷயமாக கருதுகின்றனர்.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிகரமான காரணங்கள்

மேடுபள்ளங்கள், திடீர் வேகத்தடைகளுக்கு புகழ்பெற்ற இந்திய சாலைகளுக்கு மிகச் சிறப்பான கார் மாடல் டட்சன் ரெடிகோ. ஏனெனில், இந்த கார் 185மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸை பெற்றிருக்கிறது. ரெனோ க்விட், மாருதி ஆல்ட்டோ 800 உள்ளிட்ட கார்களைவிட டட்சன் ரெடிகோ கார் சிறப்பான கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்ட மாடலாக விளங்குகிறது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிகரமான காரணங்கள்

மிக குறைவான விலை கொண்ட பட்ஜெட் கார் மார்க்கெட்டில் முதல்முறையாக எல்இடி பகல்நேர விளக்குகளுடன் கிடைக்கும் முதல் கார் மாடலும் டட்சன் ரெடிகோதான் என்பதும் கவனிக்கத்தக்கது. விலை உயர்ந்த கார் மாடல்களில் மட்டுமே இந்த வசதிகள் கிடைத்து வரும் நிலையில், டட்சன் ரெடிகோ இந்த விஷயத்தில் முன்னோடியாக மாறியிருக்கிறது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிகரமான காரணங்கள்

விலை, வசதிகள், தோற்றம், இதர அம்சங்களில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து, முன்பதிவு அதிகம் கிடைத்ததால், நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு டட்சன் ரெடிகோ கார்கள் டெலிவிரி வழங்கப்பட்டன.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

ஹைதராபாத்தில் நடந்த டட்சன் ரெடிகோ கார்கள் டெலிவிரி வழங்கும் நிகழ்ச்சியில் 2016 ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ந்த பிவி.சிந்து பங்கேற்று வாடிக்கையாளர்களுக்கு சாவி கொத்தை வழங்கி சிறப்பித்தார்.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

டிமான்ட் அதிகரித்ததையடுத்து, பண்டிகை காலத்தில் டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் என்ற சிறப்பு பதிப்பு மாடலும் வெளியிடப்பட்டது. இந்த மாடலை ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த சாக்ஷி மாலிக் அறிமுகம் செய்தார். மேலும், ரெடிகோ ஸ்போர்ட் காருக்கு விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டார். மேலும், சாக்ஷி மாலிக்கிற்கு முதல் டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் காரில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருந்தன. காருக்கு கவர்ச்சி சேர்க்கும் விதத்தில், கருப்பு வண்ணக் கோடுகள், கருப்பு வண்ண தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு, அதில் சிவப்பு வண்ண அலங்காரம் ஆகியவை முக்கியமாக அமைந்தன.

சக்கரங்களிலும் சிவப்பு வண்ண அலங்காரம் கொடுக்கப்பட்டிருந்தது. கருப்பு வண்ண பம்பர்கள், கருப்பு வண்ண ஸ்பாய்லர், க்ரோம் பூச்சுடன் கூடிய புகைப்போக்கி குழாய் போன்றவையும் இந்த காரின் மிகவும் விசேஷமான அம்சங்களாக கூறலாம்.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

இத்துடன் இந்த பட்டியல் முடிந்துவிடவில்லை. டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் காரில் புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்டவையும் இடம்பெற்று இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ரியர் பார்க்கிங் சென்சார்களும் இடம்பெற்று இருந்தன.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் காரின் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் லாட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து டட்சன் ரெடிகோ ஸ்போர்ட் கார்களும் விற்று தீர்ந்ததால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

மேலும், டட்சன் ரெடிகோ கார் உரிமையாளர்களுக்கு #DatsunLove என்ற பெயரில் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது. டட்சன் ரெடிகோ கார் உரிமையாளர்கள் தங்களது காரின் சிறந்த படங்களை பகிர்ந்து கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைந்தது. ஜப்பானுக்கு டூர் செல்வதற்கான வாய்ப்புடன் நடத்தப்பட்ட இந்த போட்டியில் ஏராளமான டட்சன் ரெடிகோ கார் உரிமையாளர்கள் பெயரை பதிவு செய்தனர்.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

இந்த போட்டியில் டெல்லியை சேர்ந்த விஷால் வத்ஸ் என்பவர் வெற்றிபெற்றார். டட்சன் ரெடிகோ காரை லே-லடாக் பகுதிகளுக்கு அவர் எடுத்துச் சென்று வெற்றிகரமாக பயணத்தை முடித்ததற்காக இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

உலகின் மிகவும் உயரமான வாகன போக்குவரத்து சாலையாக கருதப்படும் கர்துங் லா கணவாய் பகுதிக்கு அவர் டட்சன் ரெடிகோ காரில் பயணம் மேற்கொண்டு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டட்சன் ரெடிகோ காரின் நம்பகத்தன்மையை உயர்த்தும் விதமாக அவரது பயணம் அமைந்ததால், போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

டட்சன் ரெடிகோ காரை வாடிக்கையாளர்கள் எளிதாக முன்பதிவு செய்யும் விதத்தில், ஸ்நாப்டீல் தளத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் அளிக்கப்பட்டது. இதனால், டீலருக்கு சென்றுதான் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தமும் இல்லாமல் போனது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

ஸ்நாப்டீல் தளத்தின் மூலமாக முன்பதிவு செய்ய இயலாதவர்களுக்காக டட்சன் ரெடிகோ காருக்கு சிறப்பு ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனும் வெளியிடப்பட்டது. ரொக்க பண பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற வசதிகள் டட்சன் ரெடிகோ காருக்கு கூடுதல் சிறப்பாக அமைந்து வருகிறது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

பல தசாப்தங்களுக்கு பிறகு 2014ம் ஆண்டில் மீண்டும் புது வாழ்வு பெற்ற டட்சன் பிராண்டு இப்போது மிகச் சிறப்பான வகையில் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பை விஸ்தரித்து வருகிறது.

டட்சன் ரெடிகோ காரின் வெற்றிக்கான காரணங்கள்

மேலும், கடந்த 2014ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் பிராண்டு இப்போது இந்தியா மட்டுமின்றி இந்தோனேஷியா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, நேபாளம், இலங்கை மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் தனது வர்த்தகத்தை விஸ்தரித்துள்ளது. இரண்டரை ஆண்டுகளில் இதுவரை ஏழு புதிய கார் மாடல்களை டட்சன் நிறுவனம் வெவ்வேறு மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரையில், டட்சன் ரெடிகோ கார் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அந்நிறுவனத்தின் விற்பனை 200 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதே டட்சன் ரெடிகோ காரின் வெற்றியை காட்டுவதாக அமைந்துள்ளது.

டட்சன் ரெடிகோ காரின் படங்களின் தொகுப்பு!

டட்சன் ரெடிகோ காரின் படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Take an in-depth look at what has made the Datsun redi-GO a success story for the reborn Japanese marque.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X