டட்சன் ரெடிகோ மாடலில் புதிய கோல்டு 1.0 லிட்டர் எடிசன் ரூ.3.69 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்.

Written By:

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் மாடல் கார் ரூ. 3.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகமாகி உள்ளது.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

குறிப்பிட்ட அளவில் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த கார் மிகவும் ஸ்டைலான தோற்றம் மற்றும் பொலிவூட்டும் அம்சங்களை தனது கட்டமைப்பில் பெற்றுள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் எடிசன் மாடலில் வெளித்தோற்றம் முழுவதும், ஒரு தங்க நிற பட்டை காரின் அனைத்து பகுதிகளிலும் படர்வது போன்று வடிவங்களை பெற்றுள்ளது.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

வெளிப்புற கட்டமைப்பில் மட்டுமில்லாமல், காரின் உள்கட்டமைப்பில் உள்ள இருக்கைகளிலும் தங்க நிற பட்டை படர்வது போன்று வடிவமைப்பு தரப்பட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்த தங்க பட்டையை தாங்கி, டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் எடிசன் மாடல் சாம்பல், வெள்ளி மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

பயணிகளின் மனநிலையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு காரின் விளக்கு அமைப்பை வைத்துக்கொள்ளும் ஏம்பியண்ட் லைடிங் தொழில்நுட்பத்தை,கைப்பேசி உடன் இணைத்துக்கொள்ளலாம்.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

டி (ஓ) வேரியண்டின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள டட்சன் ரெடிகோ கோல்டு காரில் ப்ளூடூத் ஆடியோ அமைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்கள் உள்ளன.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

iSAT என்கிற நுண்ணறிவு பெற்ற தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட இந்த கார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாராகிப்படுகிறது.

1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் மூலம் 67 பிஎச்பி பவர் மற்றும் 91 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

காரின் செயல்பாட்டிற்காக எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஆராயின் விதிகளின் படி ரெடிகோ 1.0 லிட்டர் கொண்ட கார் லிட்டருக்கு 22.5 கி.மீ மைலேஜ் தரும் எனடட்சன் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

விரிவான சேவை தொகுப்பு கொண்ட வசதிகளை இந்த கார் பெற்றுள்ளது. இவை அனைத்தையும் உள்ளடக்கிய கார் சர்வீஸ் தொகுப்பு மூன்று, நான்கு மற்றும் ஐந்து ஆண்டுகள் விருப்ப தேர்வின் படி கிடைக்கிறது.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

டட்சன் வழங்கும் இந்த சர்வீஸ் வசதிகளை வாடிக்கையாளர்கள் காலத்திற்கு ஏற்றவாறான அல்லது பொதுவான முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

இந்தியாவிற்கான டட்சன் கார்களின் சந்தை மற்றும் வணிக பிரிவிற்கான துணைத் தலைவர் ஜிரோம் சாய்கோட் பேசும்போது,

"டட்சன் நிறுவனம் இந்த பண்டிகை காலத்தை வாடிக்கையாளர்கள் மிக உற்சாகமாக கொண்டாடிட அது அளிக்கும் மாடல் தான் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் எடிசன் கார்" என்று கூறினார்.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

மேலும் அவர், "தகுந்த விலை, சிறந்த செயல்திறன் மற்றும் புத்துணர்ச்சி ஊட்டும் வெளிக்கட்டமைப்பு என இந்த காரின் அம்சங்கள் அனைத்தையும், வாடிக்கையாளரின் மதிப்பை அறிந்து தயாரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

ஹேட்ச்பேக் கார்களுக்கான சந்தை இந்தியாவில் திறம்பட செயல்பட்டு வருகிறது, அதை பயன்படுத்தி டட்சன் ரெடிகோ மாடலில் இந்த புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.

டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 லிட்டர் கார் விற்பனைக்கு அறிமுகம்..!!

பண்டிகை காலத்தை பயன்படுத்தி பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சந்தையை ஆக்கிரமித்து வரும் சூழலில், டட்சன் ரெடிகோ கோல்டு 1.0 காரின் என்ட்ரி மேலும் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமாக அமைந்துள்ளது

English summary
Read in Tamil: Datsun rediGO Gold 1.0-Litre Launched In India Priced At Rs 3.69 Lakh. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark