மின்சார ஆற்றலில் மீண்டு வரும் ஹம்மர் கார்... அச்சாரம் கொடுத்த ஹாலிவுட் நாயகன் அர்னால்டு..!!

மின்சார ஆற்றலில் மீண்டு வரும் ஹம்மர் கார்... அச்சாரம் கொடுத்த ஹாலிவுட் நாயகன் அர்னால்டு..!!

By Azhagar

ஹாலிவுட் படங்களில் இன்றும் ஹம்மர் கார்களை பார்த்தால், நமக்கு அடுத்து நினைவுக்கு வரும் பிரபலம் அர்னால்டு சுவார்ஸ்நேக்கர். அர்னால்டும், ஹம்மர் காரும் பிரிக்க முடியாத பந்தமுடையவை.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் ஹம்மர் காரை புதிய நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த காரை சமீபத்தில் திறந்து வைத்தார் அர்னால்டு சுவார்ஸ்நேக்கர்.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

கிரைசல் எலக்ட்ரிக் என்ற ஆஸ்ட்ரியா நிறுவனம் கம்பஷன் எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை மின்சார பயன்பாட்டிற்கு மாற்றுவதில் கைதேர்ந்தவையாக உள்ளது.

அந்நிறுவனத்தின் முயற்சியால் தற்போது முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் திறன் பெற்ற ஹம்மர் காரை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

அர்னால்ட் சுவார்ஸ்நேக்கர் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் காரை, கிரைசல் எலக்ட்ரிக் நிறுவனம் தான் மின்சார பயன்பாட்டிற்காக கஸ்டமைஸ் செய்து வழங்கியுள்ளது.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

கிரைசல் எலக்ட்ரிக்கின் சிறப்பான பணிக்கு மகிழ்ச்சி தெரிவித்த அர்னால்ட், ஹம்மர் காரை மின்சார பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டு இருப்பதை ஆர்வமாக பாராட்டினார்.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

மேலும் அவர் பேசுகையில், கிரைசல் எலக்ட்ரிக் அடுத்து மின்சார விமானங்களை தயாரித்தால் கூட அதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்று கூறி அரங்கத்தை சரிக்க வைத்தார்.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

அதிதீவிர முயற்சிக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஹம்மர் ஹெச் 1 காரின் அனைத்து ஆக்சைலிலும், மின்சார மோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ன,

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

இந்த காரை ஒரு மணி நேரத்தில் 100 கிலோ வால்ட்டிற்கு சார்ஜ் செய்தால், அதன் மூலம் 480 பிஎச்பி-க்கு இணையான 360 கிலோ வோல்ட் மின்சார ஆற்றலை கிடைக்கும்.

அதிசியக்க வைக்கும் இந்த திறன் கொண்ட கார் சுமார் 3300 கிலோ எடைக்கொண்டவை. மேலும் இதனுடைய டாப் ஸ்பீடு மணிக்கு 120 கி.மீ.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

மிகவும் வருத்தமான செய்தி இதில் என்னவென்றால், கிரைசல் எலக்ட்ரிக் தயாரித்திருக்கும் இந்த மின்சார ஹம்மர் கார் விற்பனைக்கு அல்ல என்பது தான்.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

இதுபோன்ற தொழில்நுட்பத்தை எடுத்துக்காட்டுவதற்கான முன்மாதிரி தான் இந்த மின்சார ஹம்மர் கார் என்கிறது கிரைசல் எலக்ட்ரிக் நிறுவனம்.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

மின்சார தயாரிப்புகளுக்கான கிரைசல் எலக்ட்ரிக் தயாரித்திருக்கும் பல முன்மாதிரிகள் அடுத்தடுத்து ஆண்டுகளில் வெளிவரும் என்பது கூடுதல் தகவல்.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

இருந்தாலும், கிரைசல் எலக்ட்ரிக் தன்னை ஒரு மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் நிறுவனமாகத்தான் அடையாளப்படுத்துகிறது.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

அதற்கு சில நிரூபணங்கள் தேவை என்பதற்கான சில சான்றுகள் தான் மின்சார ஹம்மர், மின்சார மெர்சிடிஸ் போன்ற தயாரிப்புகள்.

சமீபமாக கூட வோக்ஸ்வேகன் இ-கோல்ஃப் மற்றும் போர்ஷே 910 கார்களையும் மின்சார ஆற்றலுக்கு கிரைசல் எலக்ட்ரிக் கஸ்டமைஸ் செய்துள்ளது.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

ஹம்மர் மாடல் கார்கள் அதிக காற்று மாசு உருவாக்குவதாக கூறி உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது இதுபோன்ற மின்சார பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டால், மீண்டும் ஹம்மர் காரின் காலம் துளிர்க்கும்.

ஹம்மர் மின்சார காரை அறிமுகம் செய்த அர்னால்டு..!!

கிரைசல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த முயற்சி நல்ல பயனை தரும் என்பது பல ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருத்து.

அதேபோல அந்நிறுவனமும், ஹம்மர் கார்களை மின்சார பயன்பாட்டிற்கு மாற்றும் புதிய தொழிற்சாலையை தொடங்கும் என நாம் விருப்பம் கொள்வோமாக.

Most Read Articles
மேலும்... #ஹம்மர் #hummer
English summary
Read in Tamil: Arnold Schwarzenegger Unveils All-Electric Hummer H1 Prototype. Click for Details...
Story first published: Thursday, September 21, 2017, 13:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X