டெஸ்லா தயாரிக்கும் புதிய மின்சார பிக்-அப் டிரக்... எலான் மஸ்க் ஆச்சர்ய அறிவிப்பு..!!
டெஸ்லா தயாரிக்கும் புதிய மின்சார பிக்-அப் டிரக்... எலான் மஸ்க் ஆச்சர்ய அறிவிப்பு..!!
அமெரிக்காவை சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, 805 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் புதிய ரக செமி டிரக்கை சமீபத்தில் வெளியிட்டது.

தற்போது அடுத்ததாக புதிய ரக பிக்-அப் டிரக்கை டெஸ்லா தயாரிக்கவுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் இந்த ஆச்சர்ய ட்விட்டர் அறிவிப்பு உலக ஆட்டோமொபைல் துறையையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. குறிப்பாக டெஸ்லாவின் இந்த பிக்-அப் டிரக், ஃபோர்டு நிறுவனத்தை புரட்டி போட்டுள்ளதாக தெரிகிறது.

அறிவிப்புகள் அபராமாக இருந்தாலும், டெஸ்லாவின் 'மாடல் ஒய்' என்ற கிராஸ்ஓவர் வாகனத்தின் வெளியீட்டிற்கு பின்னர் தான் இந்த பிக்-அப் டிரக்கிற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கும் சூழ்நிலை உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக எலான் மஸ்க், பிக்-அப் டிரக்கிற்கான உருவாக்க பணிகளை குறித்து சிந்தித்து வந்துள்ளார்.
இதுவரை இல்லாத பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தோற்றத்தில் டெஸ்லா பிக்-அப் டிரக் தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video


2ம் தலைமுறைக்கான ரோட்ஸடர் அறிமுக விழாவின் போதே, செமி-டிரக் தயாரிக்கும் முடிவை எலான் மஸ்க், வெளியிட்டு இருந்தார். அதனால் அறிவிப்பு தான் ஆச்சர்யமே தவிர, செய்தி பழையது தான்.
Trending On Drivespark:

'மாடல் ஒய்' வாகனம், மின்சார காம்பேக்ட் கிராஸ்ஓவர் பாணியில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் குறித்த அறிவிப்பை டெஸ்லா விரைவில் வெளியிடவுள்ளது.

பொருட்களை வைப்பதற்காக செமி டிரக்குகளின் பின்பிறபுத்தில் பிக்-அப் பேடுகள் இடம்பெற்றிருக்கும். அதற்கான தேவையுடன் தான் டெஸ்லாவின் புதிய பிக்-அப் டிரக் உருவாகுகிறது.

தற்போது ஃபோர்டு வெளியிட்டுள்ளஎஃப்-150 பிக்-அப் டிரக் மாடலில், பிக்-அப் பேடுகள் உள்ளன. அதனால் டெஸ்லாவின் இந்த பிக்-அப் டிரக் ஃபோர்டு எஃப்-150 மாடலுக்கு போட்டியாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால் சில தேவைகளை தவிர இரு டிரக்குகளில் தொழில்நுட்பங்களும் மாறுபடும் என்று கூறியுள்ளார் டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்.
மாடல் 3 செடான் பிளாட்ஃபாரமில் தயாராகியுள்ள மாடல் ஒய் கிராஸ்ஓவர் வாகனத்தை, டெஸ்லா 2019ம் ஆண்டின் மத்திய பகுதியில் தொடங்குகிறது.

டெஸ்லா பெரிதும் எதிர்பார்த்து வரும் இந்த கிராஸ்ஓவருக்கான தயாரிப்பு பணிகள் முடிந்த பிறகே பிக்-அப் டிரக்கிற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கும்.
டெஸ்லா வெளியிட்டுள்ள மின்சாரத்தால் இயங்கும் செமி டிரக் கனரக வாகன துறையின் பயன்பாட்டிற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதை தொடர்ந்து மின்சாரத்தால் இயங்கும் டெஸ்லாவின் பிக்-அப் டிரக் உலகளவில் கனரக வாகன பயன்பாட்டில் கேம்-சேஜிங்காக மாறும்.
டெஸ்லா தற்போது வெளியிட்டுள்ள செமி டிரக் போலவே செயல்திறன் மற்றும் வாகன ஓட்டத்தில் சிறப்பான கட்டமைப்பை புதிய பிக்-அப் டிரக்கும் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








