இன்னோவாவுக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா காரின் ஸ்பை படங்கள்!

Written By:

டொயோட்டா இன்னோவா காருக்கு போட்டியான ரகத்தில் புதிய எம்பிவி கார் மாடலை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் அடையாளங்கள் மறைக்கப்பட்டு தொடர்ந்து சாலை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து, அந்தந்த சீதோஷ்ண நிலையில் எவ்வாறு இதன் செயல்பாடு இருக்கிறது என்பது குறித்து மஹிந்திரா பொறியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில், பெங்களூரில் இந்த கார் அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சோதனை செய்யப்பட்டது.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

சோதனையின்போது எடுக்கப்பட்ட படங்களை இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம். பழைய ஸ்பை படங்களை ஒப்பிடும்போது இந்த கார் தற்போது தயாரிப்புக்கான நிலையை முழுமையாக எட்டியிருப்பதை காண முடிகிறது.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

யு321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த காரில் முகப்பில் மஹிந்திரா நிறுவனங்களின் புதிய மாடல்களில் இருப்பது போன்றே 8 ஸ்லாட் க்ரில் அமைப்பு இருக்கிறது. அதாவது, மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் மேம்பட்ட மாடலின் க்ரில் அமைப்பு இந்த காரில் இடம்பெற்றிருக்கிறது.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

அத்துடன், இந்த காரில் 5 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

ஒட்டுமொத்த தோற்றமும் டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியை தரும் வகையில் பிரம்மாண்டமாகவே தெரிகிறது. கேயூவி100 மற்றும் எக்ஸ்யூவி 500 ஆகிய மாடல்களுக்கு பின்னரர் இந்த கார் மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய பிளாட்ஃபார்மில் மோனோகாக் சேஸீயுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

எஞ்சின் ஆப்ஷன்கள் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. அதேநேரத்தில், இந்த காரில் 2.0 லிட்டர் எம்ஹாக் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் புதிய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

அடுத்த ஆண்டு நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் இந்த புதிய எம்பிவி கார் காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. மஹிந்திராவின் நாசிக் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரில் முக்காடு போடு சுற்றிய மஹிந்திரா எம்பிவி கார்!

டொயோட்டா இன்னோவா காருக்கு போட்டியாக வந்தாலும், அந்த காரை விட விலை மிக சவாலாக இருக்கும். அதிக இடவசதி, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் இந்த புதிய கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலைப் பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Toyota Innova Rival From Mahindra Spotted Testing In Bangalore.
Story first published: Friday, September 8, 2017, 13:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark