புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் வெளியீடு: படங்களுடன் தகவல்கள்!!

மிகவும் சக்திவாய்ந்த புதிய ஃபெராரி கார் பற்றிய படங்கள் மற்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

By Saravana Rajan

டர்போசார்ஜர் இல்லாமல் இயங்கும் மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் என்ற புதிய சூப்பர் கார் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கார் பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை தொடர்ந்து காணலாம்.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா காருக்கு மாற்றாக இந்த புதிய ஃபெராரி கார் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

இந்த காரில் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கறது. அதிகபட்சமாக 789 பிஎச்பி பவரையும், 718 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும். ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா காரைவிட 40 பிஎச்பி கூடுதல் சக்தியை பெற்றிருக்கிறது. டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் மூலமாக எஞ்சின் சக்தி பின் சக்கரங்களுக்கு கடத்தப்படுகிறது.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

டர்போசார்ஜர் துணையில்லாமல் இயங்கும் மிகவும் சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபெராரி கார் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 339.5 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

இந்த புதிய ஃபெராரி காரில் மின்னணு தொழில்நுட்ப உதவியில் இயங்கும் புதிய ஸ்டீயரிங் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்துடன் வரும் முதல் ஃபெராரி கார் இது என்பதும் முக்கிய சிறப்பம்சம்.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் காரில் மேம்படுத்தப்பட்ட 4 வீல் டிரைவ் ஸ்டீயரிங் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. விர்ச்சுவல் ஷார்ட் வீல்பேஸ் 2.0 என்று குறிப்பிடப்படும் இந்த புதிய ஸ்டீயரிங் அமைப்பு மூலமாக காரின் கையாளுமை மிகச் சிறப்பாக இருப்பதுடன் , வளைவுகளில் திரும்பும்போது மிகுந்த நிலைத்தன்மையுடன் செல்லும்.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

ஃபெராரி பெர்லினேட்டா காரை போன்றே மிக நீளமான பானட் மற்றும் குட்டையான பின்புற அமைப்புடன் தன்னை ஃபாஸ்ட்பேக் ரக காராக அடையாளம் காட்டுகிறது புதிய ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார். முன்புறத்தில் இருக்கும் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் அகலமான ஏர் இன்டேக் அமைப்பும் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

1969ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஃபெராரி 365 ஜிடிபி4 டேடோனா காரின் டிசைன் தாத்பரியங்கள் சிலவற்றையும் இந்த காரில் பயன்படுத்தி இருப்பதாக ஃபெராரி தெரிவித்துள்ளது. அதாவது, நான்கு வட்ட வடிவ டெயில் லைட்டுகள் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்திற்கு தலா இரண்டு புகைப் போக்கி குழல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் வண்ணத்திலேயே டிஃப்யூசர் கொடுக்கப்பட்டு இருப்பதையும் காணலாம்.

 பவர்ஃபுல் புதிய ஃபெராரி சூப்பர் கார் வெளியீடு... படங்களுடன், தகவல்களுடன்!!

அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வர இருக்கிறது இந்த புதிய ஃபெராரி கார். அப்போது இந்த காரின் விலை உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் வெளியிடப்படும்.

புதிய ஹோண்டா சிட்டி காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிட்டி காரின் எக்ஸ்க்ளூசிவ் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Ferrari 812 Superfast Revealed. The 812 Superfast boasts of the most powerful naturally aspirated V12 engine Ferrari has ever produced.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X