ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்... விரைவில் இந்தியாவில் ஆரம்பம்..!!

Written By:

2017 விரைவில் விடைபெறும் நிலையில், கார் தயாரிப்பு துறையில் கால்பதித்து இந்தாண்டுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது ஃபெராரி.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

இதற்கான கொண்டாட்டம் இந்தியாவில் நடைபெறுமா என இங்குள்ள ஃபெராரி கார் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

எந்தவொரு சமூதாய உடன்பாட்டையும் தவிர்க்க ஃபெராரி தற்போது தயாராக இல்லை. அதன்காரணமாக, இம்மாதம் 10ம் தேதி ஃபெராரியின் 70ம் ஆண்டு கொண்டாட்டங்கள் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

70ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு வேண்டி, நொய்டாவில் அமைந்துள்ள புத்த சர்வதேச சர்க்யூட்டில் (பி.ஐ.சி) ரேஸ் டிராக் அமைக்கப்படவுள்ளது.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வாக இந்தியாவின் ஃபெராரி வாடிக்கையாளர்கள், தங்கள் கார்களை இந்த சர்கியூட்டில் ஓட்டி, காரின் முழுமையாக செயல்திறனை அனுபவிக்கலாம்.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

டெல்லிக்கு பிறகு ஃபெராரியின் 70ம் ஆண்டு கொண்டாட்டங்கள் மும்பையில் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

மும்பை வோர்லி-பந்த்ரா கடல் பாலத்தில் நடக்கும் இதற்கான நிகழ்வில் சுமார் 25 ஃபெராரி கார்கள் சீறிப்பாயவுள்ளன.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

குறிப்பாக மும்பை ஃபெராரி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல், உலகளவில் இருந்தும் பல ஃபெராரி கார் உரிமையாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

இந்தியாவை போன்று ஃபெராரியின் 70ம் ஆண்டு கொண்டாட்டங்கள் உலகளவில் 60 நாடுகளில் நடைபெற்றன.

ஃபெராரியின் தனித்துவம், அரிதான கிளாசிக் மாடல்கள் போன்றவற்றி பறைசாற்றி கொண்டாட்டங்கள் அமைந்தன.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

மேலும் இதில் ‘Driven By Emotion' என்ற தீம் உருவாக்கப்பட்டு, அதன்கீழும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

ஃபெராரி நிறுவனம் 1947ம் ஆண்டு தொடங்கி பல்வேறு மாடலில் ஐக்கானிக் அடையாளம் பெற்ற கார்களை தயாரித்துள்ளது. பிரபலமான 125 எஸ் மாடல் தொடங்கி ஃபெராரியின் தயாரிப்பு பெருமைகளை உலகமே அறியும்.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

சாதாரண சாலை அமைப்புகளுக்கு மட்டுமில்லாமல், ஃபெராரி புகழ்பெற்ற ரேஸ் டிராக் கார் மாடல்களையும் தயாரித்து வருகிறது.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

488 ஜிடிபி, 488 ஸ்பைடர், ஜிடிசி லூஸ்ஸோ, ஜிடிசி4 லூஸ்ஸோ டி, கலிஃபோர்னியா டி (ஃபோர்த்தோஃபினோவிற்கான மாற்று) மற்றும் 812 சூப்பார்ஃபாஸ்ட் என பலதரப்பட்ட மாடல்களை தற்போது ஃபெராரி விற்பனை செய்துவருகிறது.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

உலகளவில் இயங்கும் பெட்ரோல் மாடல் சூப்பர் கார்களில் பொருத்தப்படும் வி8 மற்றும் வி12 எஞ்சின்கள் ஃபெராரி தயாரித்தது தான்.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

என்சொ ஃபெராரி முன்னர் குறிப்பிட்டது போன்று, ஃபெராரி தயாரிக்கும் எஞ்சின்களுக்கு வேண்டி தான் கார்கள் உருவாக்கப்படுகின்றன.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

ஃபெராரி என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது அந்த குதிரை இலச்சினை தான். இவை அனைத்தும் வடக்கு இத்தாலி நாட்டில் இருக்கும் மரனெல்லோ என்ற மாகாணத்தில் இருந்து தான் தொடங்கியது.

இந்தியாவில் ஃபெராரி 70ம் ஆண்டு கொண்டாட்டம்..!!

ஃபெராரி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட முதல் நாளிலேயே அதனுடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

உலகம் முழுவதும் ஃபெராரி ஏற்படுத்திக்கொண்ட ரசிகர் வட்டம் என்பது அதன் உழைப்பிற்கு கிடைத்த மகுடம்.

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Read in Tamil: Ferrari 70th Anniversary Celebrations;This Is The Plan For India. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark