கலிஃபோர்னியா காருக்கு பிரியாவிடை கொடுத்து புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

Written By:

இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் தயாரிப்பாளரான ஃபெராரி அசரடிக்கும் புதிய போர்டோஃபினோ காரை வெளியிட்டுள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

விரைவில் நடைபெற இருக்கும் ஃபிராங்க்பூர்ட் மோட்டார் ஷோவில் போர்டோஃபினோ காரை ஃபெராரி அறிமுகப்படுத்துகிறது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

இத்தாலியில் உள்ள ஒரு கிராமத்தின் போர்டோஃபினோ என்ற பெயரை இந்த காருக்கு சூட்டியதுடன், ஆட்டோமொபைல் சந்தையில் கலிஃபோர்னியா டி என்ற காருக்கு பதிலாக எண்ட்ரி லெவல் காராக போர்டோஃபினோ மாடலை ஃபெராரி வெளியிடுகிறது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

முற்றிலும் புதிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள போர்டோஃபினோ காரில் 3.9 லிட்டர் திறன் பெற்ற ட்விண்டர்போ வி8 எஞ்சின் உள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

90 டிகிரியில் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த வி8 எஞ்சினில் பிஸ்டன் மற்றும் ஒரே புகைப்போக்கி அமைப்பை பெற்றுள்ளது.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

3855சிசி திறன் பெற்ற ட்வின் டர்போ வி8 எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் 592 பிஎச்பி பவர் மற்றும் 760 என்.எம் டார்க் திறனை வழங்கும் என ஃபெராரி தெரிவித்துள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

மிகவும் நுட்பமான செயல்திறனை பெற்றுள்ள இந்த எஞ்சின் போர்டோஃபினோ காரில் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்துள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ எட்ட இந்த காருக்கு 3.5 விநாடிகள் போதுமானது. மேலும் இதனுடைய அதிகபட்ச திறன் மணிக்கு 320 கி.மீ என ஃபெராரி குறிப்பிட்டுள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

கலிஃபோர்னியா டி காரில் இருந்ததை விட, ஃபெராரி நிறுவனம் போர்டோஃபினோ காரில் முற்றிலும் புதிய மற்றும் இலகு முறையிலான அலுமினியக் கேஸிஸை பயன்படுத்தியுள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

இதனால் காரின் உறுதிதன்மை வலிமையாக்கப்பட்டு, போர்டோஃபினோ மாடலின் எடை மிகவும் குறைந்த அளவில் இருக்கும் என ஃபெராரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

கலிஃபோர்னியா டி காரை விட புதிய ஃபெராரி போர்டோஃபினோ சிறிது பெரியதாக தோற்றமளிக்கிறது. நீளம் அகலம் மற்றும் உயரம் என அனைத்தும் சிறிது பெரியதாக்கப்பட்டுள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

காரின் மடித்து வைக்கக்கூடிய ரூஃப் டாப் கலிஃபோர்னியா டி மாடல் விட நில அளவில் இருந்து சுமார் 1381மிமீ மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

போர்டோஃபினோ காரின் செயல்திறன் மற்றும் வடிவமைப்பு அனைத்தும் இதுவரையில் ஃபெராரி வெளியிட்ட மாடலைக்காட்டிலும் தனித்துவம் உடையதாக உள்ளது.

புதிய போர்டோஃபினோ சூப்பர்காரை வெளியிடும் ஃபெராரி..!!

மிருதுவான தன்மையுடனும், அதே சமயத்தில் ஸ்போர்டியர் தரத்தினுடம் செப்டம்பரில் வெளிவரும் ஃபெராரி போர்டோஃபினோ சூப்பர்காரை எதிர்நோக்கி உலகமே காத்திருக்கிறது.

மேலும்... #ஃபெராரி #ferrari
English summary
Read in Tamil: Italian supercar manufacturer Ferrari has revealed the stunning new Portofino.
Story first published: Thursday, August 24, 2017, 11:09 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark