ஜீரோ ரேட்டிங் பெற்று க்ராஷ் டெஸ்டில் சொதப்பிய புன்ட்டோ கார்... ஃபியட் தலைக்குனிவு..!!

ஜீரோ ரேட்டிங் பெற்று க்ராஷ் டெஸ்டில் சொதப்பிய புன்ட்டோ கார்... ஃபியட் தலைக்குனிவு..!!

By Azhagar

உலகளவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்களில் ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ காருக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டமுண்டு.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

கெத்தான தோரணையுடன் இதுவரை வலம் வந்த புன்ட்டோ கார் மீது யார் கண்பட்டதோ தெரியவில்லை, அதற்கு தற்போது சொதப்பல் காலமாக மாறியுள்ளது.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

காரை மதிப்பிடும் அமைப்பு, புன்ட்டோ காருக்கு ஜீரோ ஸ்டார் ரேடிங் வழங்கியதுடன், காரின் பாதுகாப்பு உபகரணங்கள் போதிய ஸ்திர தன்மையுடன் இல்லை என்று கூறியுள்ளது.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து வரும் பல்வேறு நிறுவனங்கள், கார்களை புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றன.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

அதேநேரத்தில் சில நிறுவனங்கள் தங்களது ஆல்-டைம் விற்பனை குவிக்கும் கார்கள் எதையும் அப்டேட் செய்யாமல் உள்ளன. அதற்கு உதாரணமாகி விட்டது ஃபியட் புன்ட்டோ.

புன்ட்டோ காரில் பாதுகாப்பு கட்டமைப்புகள் வலிமையாக இருப்பதற்கான எந்த தகுதியையும் ஃபியட் நிர்ணயிக்கவில்லை.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஃபியட் புன்ட்டோ இந்தியாவில் விற்பனையாகும் ஹேட்ச்பேக் மாடல்களில் முன்னணியில் உள்ளது.

Recommended Video

After more than 16 years, Mini has changed their logo - DriveSpark
க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

யூரோ கார் மதிப்பீட்டு அமைப்பின் பொதுச் செயலாளர் மைக்கேல் வான் ரேடென்ன் கூறும்போது, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு கார்களில் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைக்காத நிறுவனங்கள் பின்னிடைவை தான் சந்திக்கும் என்கிறார்.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

இந்தியாவில் 2005ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஃபியட் புன்ட்டோ கார் தான் விற்பனையில் உள்ளது. புன்ட்டோ கார் பிரபலமாக இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது என்பது யூரோ என்.சி.ஏ.பி-யின் கருத்தாக உள்ளது.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

நிறுவனங்களை பொறுத்தவரை புதிய பாதுகாப்பு அம்சங்களை கட்டமைக்கத்தான் தான் யூரோ என்.சி.ஏ.பி வலியுறுத்துகிறது. ஆனால் அதற்குரிய 5 ஸ்டார் ரேடிங்கை பெற்ற கார்கள் 2017ல் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

ஹேட்ச்பேக் கார்கள் மத்தியில் இருக்கவேண்டிய எந்த பாதுகாப்பும் மற்றும் அடிப்படையிலான அம்சங்கள் இல்லாத மாடலாகவே புன்ட்டோ இருக்கிறது.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

தென் அமெரிக்க நாடுகளில் புன்ட்டோவின் இடத்தை மாற்ற ஃபியட் நிறுவனம் ஆர்கோ என்ற காரை கொண்டு வந்தது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள புன்ட்டோ காருக்கு பதிலாக புதிய கார் வெளியிடும் முடிவை ஃபியட் இன்னும் பரிசீலித்து வருகிறது.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

எதுவாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் கார்கள், பைக்குகள் விற்பனையில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்களை எதிர்பார்ப்பது அடிப்படை தேவையாக மாறியுள்ளது.

க்ராஷ் டெஸ்டில் தோல்வியடைந்த புன்ட்டோ கார்..!!

இந்த மாற்றத்தை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சரியாக உணர்ந்துக்கொள்ள வேண்டும். ஃபியட் போன்ற உலகின் முன்னோடி கார் தயாரிப்பு நிறுவனம், தொழில்நுட்ப மேம்பாடுகளில் பின்னிடைவில் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றுதான்.

Most Read Articles
மேலும்... #ஃபியட் #fiat
English summary
Read in Tamil: Fiat Punto Fails Badly In Euro NCAP Crash Test Rating. Click for Details...
Story first published: Friday, December 15, 2017, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X