ஐரோப்பாவிற்கு ரயிலில் செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

Written By:

'மேட் இன் சைனா' என்றாலே இளக்காரமாக பார்க்கப்படும் பிம்பம் உண்டு. ஆனால், அதனை உடைத்து புதிய சரித்திரங்களை அந்நாடு படைத்து வருகிறது. இப்போது ஐபோன் முதல் வால்வோ கார்கள் வரை சீனாவில் தயாரிக்கப்படும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பா செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

முதல்முறையாக சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட வால்வோ எஸ்90 செடான் கார்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது அந்நாட்டு ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் புதிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

ஐரோப்பா செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

இதுவரை மேலே நாடுகளில் இருந்து வால்வோ உள்ளிட்ட சொகுசு கார்களை அந்நாடு இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது அங்கிருந்து ஐரோப்பாவிற்கு வால்வோ கார்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை சீனாவை சேர்ந்த கீலி நிறுவனம் வாங்கி விட்டது.

ஐரோப்பா செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

இதனால், தற்போது வால்வோ கார் உற்பத்தி சீனாவில் நடந்து வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படுவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வால்வோ கார்கள் ஏற்றுமதி செய்யப்படுவதுதான் இதில் முக்கியமான விஷயம்.

ஐரோப்பா செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

மேற்கு சீனாவில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள டாக்ஜிங் என்ற இடத்தில் இருந்த பெல்ஜியம் நாட்டில் உள்ள ஸீபுருகீ துறைமுகத்திற்கு ரயில் மூலமாக 123 வால்வோ கார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

இந்த ரயில் ரஷ்யா, பெலாரஸ், போலந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வழியாக 18 நாட்கள் பயணத்தில் பெல்ஜியத்தை சென்றடையும். இந்த ரயில் 9,832 கிமீ தூரம் பயணிக்க இருக்கிறது. குறிப்பாக, சில்க் ரூட் எனப்படும் பண்டைய வர்த்தக வழித்தடத்தில் இந்த ரயில் பயணிக்க இருக்கிறது.

ஐரோப்பா செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரயில் மார்க்கமாக பொருட்களை கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் சீனா மிக தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. அண்மையில் லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களுக்கு சரக்கு ரயில் சேவையை துவங்கியது. இதன்மூலமாக, கடல் மார்க்கமாக அனுப்பும்போது ஏற்படும் கால விரயம் வெகுவாக தவிர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஐரோப்பா செல்லும் 'மேட் இன் சைனா' வால்வோ கார்கள்!

இந்த நிலையில், தற்போது கார்களையும் ரயில் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப துவங்கி இருக்கிறது சீனா. இதில், வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை சீனா பெற்று வருகிறது.

மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo Cars has become the first automaker in the world to export China made cars to Europe by train via China’s new ‘One Belt, One Road’ trade initiative.
Story first published: Thursday, June 8, 2017, 14:04 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark