ஃபோர்டு அறிமுகம் செய்யும் சீறும் டிராகன் ஃபேமிலி பெட்ரோல் எஞ்சின்..!!

Written By:

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் புதிய ஈகோஸ்போர்ட்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் வெளியிட ஆய்த்தமாகி வருகிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

இதுகுறித்து ஆட்டோ கார் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த காம்பேக்ட் எஸ்.யூ.வி கார் அனைத்து விதத்திலும் புதுவிதமான டிராகன் ஃபேமிலி பெட்ரோல் எஞ்சின் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

டிராகன் வரிசை எஞ்சின் கொண்டு ஃபோர்டு தயாரித்து வரும் கார்களுக்கு உலகளவில் ஒரே நாடாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுப்பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் சில வாரங்களில் ஃபோர்டு நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

டிராகன் வரிசையிலான எஞ்சினைக்கொண்டு 1.5 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இரண்டு தேர்வுகள் கொண்ட வகையில் ஃபோர்டு நிறுவனம் கார்களை தயாரிக்கிறது.

Recommended Video - Watch Now!
Jeep Compass Full Details In Tamil - DriveSpark தமிழ்
புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

இதில் 1.5 லிட்டர் கொண்ட எஞ்சினில் 3 சிலிண்டர் இருக்கும். ஈகோஸ்போர்டு ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பொருதப்படும் இந்த எஞ்சின் 120 பிஎச்பி பவரை வழங்கும்.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

அதேபோல டிராகன் ஃபேமிலி வரிசையில் வரும் 1.2 லிட்டர் திறன் பெற்ற எஞ்சின் அடுத்த தலைமுறைக்கான ஃபிகோ மற்றும் ஏஸ்பையர் மாடல்களில் பொருத்தப்படவுள்ளது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

2019 ம் ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இரு மாடல்களும் சிறந்த விற்பனை திறனை பெறும் என்பது தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

இந்த புதிய டிராகன் ஃபேமிலி எஞ்சின் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவர இருக்கின்றன. ஆனால் அதைப்பற்றி இப்போது வரை ஃபோர்டு வாயை திறக்கவில்லை.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

ஆனால் நமக்கு கிடைக்கும் தகவலின்படி புதிய சுற்றுப்புறச் சூழல் குறித்த விதிகளின் படி இந்த டிராகன் ஃபேமிலி எஞ்சின்கள் தயாராகவுள்ளன.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

ஒருங்கிணைந்த வகையில் புகையை வெளியேற்றும் முறை, காற்றியக்கவியல் பியரிங் கொண்ட ராக்கெட் ஷாஃப்ட், ஆயில் பம்ப் மற்றும் டூயல்-வால்வ் கட்டுபாடு போன்ற எதிர்காலத்திற்கான தொழில்நுட்பங்களை இந்த எஞ்சின் கொண்டு இருக்கும்.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

சனந்தில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் தான் டிராகன் ஃபேமிலி எஞ்சினுக்கான உற்பத்தி நடைபெறுகிறது.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

சரியான விலை தேர்வுடன், சிறந்த செயல்திறன் மற்றும் எரிவாயு சேமிப்பு திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த எஞ்சினின் செயல்பாடு இருக்கும்.

புதிய டிராகன் ஃபேமிலி பெட்ரோல் எஞ்சின் தொழில்நுட்பத்திலும், செயல்பாட்டிலும் சிறந்தவையாக இருக்கும்.

புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் ஃபோர்டு..!

ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இது பொருத்தப்பட்டால், அதனுடைய போட்டி மாடல்களாலான மாருதி பிரஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் போன்றவற்றில் இல்லாத சிறப்பு ஈக்கோஸ்போர்ட் மாடலுக்கு கிடைக்கும்.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Read in Tamil: American automaker Ford is all set to launch the EcoSport facelift in India; with Dragon Series Engine. Click for Details...
Story first published: Friday, August 4, 2017, 16:50 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark