ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி விபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

வரும் நவம்பர் 9ந் தேதி புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் கார்களால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்தும் விதத்தில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிக்கு வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய க்ரில், பம்பர் அமைப்புடன் முகப்பில் பிரம்மாண்டமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்புற கதவில் கொடுக்கப்படும் வீல் கவர் புதிது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

இதுதவிர, கரும் பூச்சு வண்ண ஹெட்லைட்டுகள், இரட்டை வண்ண அலாய் வீல்கள் கொடுக்கப்படுகின்றன. புதிய 17 அங்குல அலாய் வீல்களும் டைட்டானியம் எஸ் வேரியண்ட்டில் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

உட்புறத்தில் சென்டர் கன்சோல் அமைப்பு மாற்றங்களை சந்தித்துள்ளது. சொகுசு கார்களில் இருப்பது போன்ற ஃப்ளோட்டிங் திரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

Recommended Video

[Tamil] Tata Nexon Review: Specs
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சப்போர்ட் செய்யும். அத்துடன், ஃபோர்டு சிங்க்3 சாஃப்ட்வேர் அப்டேட்டுடன் வருகிறது. புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய ஸ்டீயரிங் வீல் ஆகியவையும் புதிது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதுப்பொலிவுடன் வரும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் புத்தம் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகமாகிறது. மூன்று சிலிண்டர்கள் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும்.

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் தவிர்த்து, ஏற்கனவே வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுக தேதி விபரம்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
மேலும்... #ford
English summary
Ford India is all set to introduce the EcoSport facelift in the country. Autocar India reports that the refreshed compact SUV will be launched in India on November 9, 2017.
Story first published: Wednesday, October 18, 2017, 12:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X