ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

Written By:

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. படங்கள், தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

காம்பேக்ட் எஸ்யூவி வாங்க விரும்புவோரின் தேர்வில் முதன்மை வகிக்கிறது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். இதன் ரகத்தில் தற்போது போட்டி அதிகமாகி இருப்பதால், கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

விரைவில் துவங்க இருக்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவமைப்பிலும், வசதிகளிலும் மாற்றங்களுடன் இந்த புதிய மாடல் வருகிறது.

Recommended Video
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் இரட்டை க்ரில் அமைப்பு ஒரே அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பம்பர் அமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டு முரட்டுத்தனமான தோற்றம் கூட்டப்பட்டு இருக்கிறது. மஸ்டாங் காரின் ஹெட்லைட் போன்றே இருக்கிறது புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் ஹெட்லைட் வடிவமைப்பு.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய அலாய் வீல்களுடன் மெருகு ஏற்றப்பட்டு இருக்கிறது. பின்புற கதவில் இருந்து ஸ்பேர் வீல் அககற்றப்பட்டு இருக்கிறது. புதிய பம்பர் அமைப்பும் மாறுதலுக்கான முக்கிய அடையாளம்.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஃபோர்டு சிங்க் 3 சாஃப்ட்வேர் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர, க்ரோம் அலங்காரம் சற்று தூக்கலாக இருக்கும்.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் தற்போது பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் கொடுக்கப்பட இருக்கிறது. ஆனால், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கூடுதல் சக்தியையும், டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 204 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக வருகிறது. தற்போதைய எஞ்சினைவிட 9 பிஎச்பி பவரையும், 1 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

ஐரோப்பாவில் எஸ்டி- லைன் என்ற விசேஷ மாடலிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த வேரியண்ட்டில் பெரிய அளவிலான அலாய் வீல்கள், எஸ்டி- லைன் பேட்ஜ் மற்றும் லெதர் இன்டீரியர் நிரந்தர அம்சங்களாக இருக்கும்.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோ மூலமாக ஐரோப்பாவில் அறிமுகமாக இருக்கும் புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இருக்கும் பல கூடுதல் சிறப்பம்சங்கள் இந்திய மாடலில் இருக்காது என்பது தெரியும். விலையை சவாலாக நிர்ணயிக்க வேண்டி, என்னென்ன அம்சங்களை இந்திய மாடலில் ஃபோர்டு நிறுவனம் நீக்கி வெளியிடப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்!

இதே மாடல் மாற்றங்களுடன் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. பண்டிகை காலத்தில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்கள் பட்டியலில் இந்த புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford unveiled the facelifted EcoSport at the Los Angeles Auto Show late last year and the revised compact SUV is all set for launch here in India.
Story first published: Wednesday, September 6, 2017, 8:27 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos