புதிய ஃபோர்டு பிகோ மற்றும் ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்..!

ஃபோர்டு பிகோ மற்றும் ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

பிரபல அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு, அதன் பிகோ ஹேட்ச்பேக் மற்றும் ஆஸ்பயர் காம்பாக்ட் செடன் கார்களின் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபோர்டு பிகோ, ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்கள் அறிமுகம்..!

பிகோ மற்றும் ஆஸ்பயர் கார்கள் அறிமுகமான வெகு விரைவிலேயே, செக்மெண்டில் சிறந்த நிலையை அவை அடைந்தன. இதன் காரணமாக ஸ்போர்டி டிசைனுடன் இதன் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய டிசைன்

புதிய டிசைன்

இயந்தரவியல் மாற்றங்கள் இல்லாமல் இதன் டிசைனில் மட்டும் கவர்ச்சிகரமான ஸ்டைலிங் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்களில் இருக்கும் புதிய சிறப்பு அம்சங்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய சிறப்பு அம்சங்கள்

புதிய சிறப்பு அம்சங்கள்

பிகோ மற்றும் ஆஸ்பயர் கார்கள் இரண்டும், கருப்பு நிற தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள கிரில் அமைப்பு, முகப்பு விளக்குகள், ஃபாக் விளக்குகள் ஆகியவை கருப்பு நிற ஷேட் செய்யப்பட்டுள்ளன.

புதிய சிறப்பு அம்சங்கள்

புதிய சிறப்பு அம்சங்கள்

இதன் அலாய் வீல்கள் 15 இஞ்சாக மேம்படுத்தப்பட்டுள்ளதோடு, சிக்னல் இண்டிகேட்டர்களுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் உள்ளிட்டவையும் கருப்பு தீமில் ஷேட் செய்யப்பட்டுள்ளன.

புதிய சிறப்பு அம்சங்கள்

புதிய சிறப்பு அம்சங்கள்

புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்களின் ரூஃப், கருப்பு வண்ண பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. புதிய கருப்பு நிற தீம் கார்களின் கவர்ச்சியை கூடுதலாக்கியுள்ளது.

புதிய சிறப்பு அம்சங்கள்

புதிய சிறப்பு அம்சங்கள்

ஸ்போர்ட்ஸ் எடிஷன் என்பதனை குறிக்கும் ‘எஸ்' என்ற ஆங்கில எழுத்து மற்றும் ஸ்போர்ட்ஸ் எடிஷன் டேக் ஆகியவை கார்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

புதிய சிறப்பு அம்சங்கள்

புதிய சிறப்பு அம்சங்கள்

வெளிப்புறத்தை போலவே இதன் உட்புறமும் கருப்பு நிற தீம் பெற்றுள்ளது. பிரீமியம் மெட்டீரியல்களுடன் கருப்பு நிறத்தில் இதன் உட்புறம் வேலைபாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய சிறப்பு அம்சங்கள்

புதிய சிறப்பு அம்சங்கள்

ஸ்டீரிங் வீலுக்கு லெதர் கவர் கொடுக்கப்பட்டுள்ளது. பிகோ காரின் உட்புறம் சிவப்பு வண்ண ஸ்டிச்சிங்கிலும், ஆஸ்பயர் காரின் உட்புறம் கிரே வண்ணத்திலும் ஸ்டிச்சிங் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்கள் இல்லை. சிறந்த ரைடிங்குக்காக இரண்டு கார்களின் சஸ்பெஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இஞ்சின்

இஞ்சின்

ஃபோர்டு பிகோ மற்றும் ஆஸ்பயர் கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலும் கிடைக்கிறது.

இஞ்சின் விவரம்

இஞ்சின் விவரம்

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 87 பிஹச்பி ஆற்றலையும், 113 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

இதேபோல, 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 99 பிஹச்பி ஆற்றலையும், 215 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இரண்டு கார்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இஞ்சின் விவரம்

இஞ்சின் விவரம்

இந்த இஞ்சின்களை தவிர்த்து அதிக பவர் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சினை ஆஃப்ஷனலாக வழங்குகிறது ஃபோர்டு. இந்த இஞ்சின் அதிகபட்சமாக 110 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இஞ்சின் விவரம்

இஞ்சின் விவரம்

இந்த இஞ்சின் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் கொண்டது. எனினும், புதிய ஸ்போர்ட்ஸ் எடிஷன் கார்களில் இந்த இஞ்சின் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

ஃபோர்டு பிகோ ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரின் பெட்ரோல் வேரியண்ட் ரூ.6.31 லட்ச ரூபாய்க்கும், டீசல் வேரியண்ட் ரூ. 7.21 லட்சத்திற்கும் கிடைக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

ஃபோர்டு ஆஸ்பயர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரின் பெட்ரோல் வேரியண்ட் ரூ.6.50 லட்சத்திற்கும், டீசல் வேரியண்ட் ரூ.7.60 லட்சத்திற்கும் கிடைக்கிறது. (டெல்லி எக்ஸ்ஷோரூம் அடிப்படையிலான விலை)

மைலேஜ்

மைலேஜ்

பிகோ காரின் பெட்ரோல் வேரியண்ட், லிட்டருக்கு 15 கிமீ மற்றும் டீசல் வேரியண்ட் லிட்டருக்கு 18 முதல் 25 கிமீ மைலேஜ் தருவதாக போர்டு நிறுவனம் கூறுகிறது.

மைலேஜ்

மைலேஜ்

இதே போல ஆஸ்பயர் காரின் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 16 கிமீ மற்றும் டீசல் வேரியண்ட் 23 கிமீ மைலேஜ் தருவதாக ஃபோர்டு நிறுவனம் கூறுகிறது.

Most Read Articles
English summary
Read in Tamil about Ford launches new Figo, Aspire Sports edition cars in india. Price, mileage, specs and more
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X