ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் ஸ்பை படங்கள் வெளியானது... விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்ப்பு..!!

Written By:

ஃபோர்டு நிறுவனத்தின் வரவேற்பு பெற்ற ஃபிகோ காரின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது, இதனால் இந்த கார் விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

இந்த கிராஸ் ஓவர் மாடலில் பல்வேறு தளங்களில் இதனுடைய சிறப்பம்சங்கள் மெரூகேற்றப்பட்டுள்ளதாக நமக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

பெரியளவில் எதிர்பார்ப்பை பெற்றிருக்கக்கூடிய இந்த கார் தற்போது இந்தியாவில் சோதனை அதி தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வந்துள்ளன. அதனால் விரைவில் இந்த காரை ஃபோர்டு இந்தியாவில் வெளியிட்டு அதனை விற்பனைக்கு கொண்டு வரும் என தெரிகிறது.

Recommended Video - Watch Now!
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

முன்னர் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தங்களது ஹேட்ச்பேக் மாடல் கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

இந்நிலையில் ஃபோர்டு நிறுவனத்தின் ஃபிகோ கிராஸ் ஓவர் கார் பலரும் எதிர்பார்க்கும் மாடலாக உள்ளது. ஒருவேளை இது வெளியானால் இந்தியாவில் இதற்கான விற்பனை திறன் உயரும் எனவும் சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் மற்றும் ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி போன்ற கார்களின் மாடல்கள் சமீபத்தில் இந்தியாவில் வெளிவந்துள்ளன.

இதனால் மேலும் தாமதம் செய்யாமல் ஃபோர்டு தனது கிராஸ்ஓவர் ஃபிகோ காரை விரைவிலேயே வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

புதிய ஃபிகோ கிராஸ்ஓவர் காரின் முன்பக்க பம்பரில் ஏர் இன்டேக்ஸ், ஹெட்லேம்புகள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன.

பழைய முறையிலான ஃபோர்டு க்ரில் இந்த காரிலும் அப்படியே உள்ள நிலையில் அதனுடைய வீல் ஆர்க்கில் பிளாஸ்டிங் கிளாடிங் உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

இந்த கிளாடிங் ஃபிகோ காரை ஒரு கிராஸ்ஓவர் மாடல் என்பதை முதல் பார்வையிலே புரிந்துக்கொள்ளும் உணர்வை தருகிறது.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

மேலும் தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெய்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் உள்கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஃபோர்டு ஃபிகோ கிராஸ்ஓவர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியானது..!

உள் மற்றும் வெளிப்புற கட்டமைப்புகளில் பெரியளவில் மாற்றத்தை பெற்றுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் புதிய ஃபிகோ கிராஸ்ஓவர் விரைவிலேயே இந்திய சந்தையில் வெளிவரவுள்ளது.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Read in Tamil: Ford New Figo Crossover Model Spy pics Leaks, makes more sensational in Indian Market. Click for Details...
Story first published: Thursday, August 17, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark