விற்பனையில் புதிய உச்சத்தை தொட்ட ஃபோர்டு!

Written By:

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும் போது அந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை இந்தாண்டில் 38% உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை உயர்வு

அமெரிக்க நிறுவனமான ஃபோர்டின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஃபோர்டு இந்தியா. சென்னை அருகே உள்ள மறைமலைநகரில் ஃபோர்டின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இது வருடத்திற்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை உயர்வு

2017 பிப்ரவரி மாதத்தில் 24,026 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ஃபோர்டு. கடந்த ஆண்டின் பிப்ரவரி மாத விற்பனையை கணக்கில் கொண்டால் அது 17,036 என்ற எண்ணிக்கையில் தான் இருந்தது.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை உயர்வு

மொத்த உள்நாட்டு விற்பனை 52 சதவீதமாகவும், வெளிநாட்டு ஏற்றுமதி

32.69 சதமும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 8,338 வாகனங்களை கடந்த மாதத்தில் ஃபோர்டு விற்பனை செய்திருந்தது.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை உயர்வு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 11,823 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்த நிலையில் இந்தாண்டு 15,688 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது போர்ட் நிறுவனம்.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை உயர்வு

இந்த விற்பனை உயர்வு குறித்து ஃபோர்டு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு நிர்வாக இயக்குனர் அனுராக் மெக்ரோத்ரா கூறும்போது, "ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியைக் காட்டிலும் ஃபோர்டு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது" என பெருமிதத்துடன் கூறினார்.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை உயர்வு

ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 209 நகரங்களில் 376 விற்பனை மற்றும் சர்வீஸ் நிலையங்கள் உள்ளன.

இந்தியாவில் ஃபோர்டு கார்களின் விற்பனை உயர்வு

ஈகோஸ்போர்ட், ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர், எண்டேவர் ஆகிய மாடல்களை இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் சந்தைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்யுவி மாடலான ஃபோர்டு எண்டேவர் காரின் படங்கள்:

English summary
Sales of Ford cars in India along with exports from the country by the American manufacturer increased last month.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark