சென்னையில் தயாரிக்கப்பட்ட கார்களில் பழுது: ரீகால் அறிவிப்பை வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம்..!!

சென்னையில் தயாரிக்கப்பட்ட கார்களில் பழுது: ரீகால் அறிவிப்பை வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம்..!!

By Arun

ஃபிகோ மற்றும் ஃபியஸ்டா கார்களில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு ஒன்றை சரிசெய்து தர ஃபோர்டு இந்தியா நிறுவனம் தாமாகவே முன்வந்து ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

ரீகால் அல்லது திரும்ப அழைக்கபடுதல் என்பது, வாகனங்கள் பழுது ஏற்படும் போது, அவற்றை சரிசெய்வதற்காக, குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனம் மூலம் மேற்கொள்ளபடும் நடவடிக்கையாகும்.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் 2004 முதல் 2012 வரை தயாரிக்கப்பட்ட ஃபிகோ மற்றும் ஃபியஸ்டா கார்களில் ‘ஹை-பிரெஷர் பவர் அசிஸ்டெட் ஸ்டீர்ங் ஹோஸ்' என்ற பாகத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

முந்தைய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஃபியஸ்டா கிளாசிக் கார்களில் இந்தப் பிரச்சனை இருப்பது ஃபோர்டு நிறுவனத்தின் சோதனையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

எனவே தாமாக முன்வந்து இப்பிரச்சனையை சரிசெய்ய முடிவுசெய்து தற்போது ரீகால் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

இதன்படி மொத்தம் 39,315 கார்களில் இப்பிரச்சனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஃபோர்டு டீலர்கள் மூலமாக இலவசமாக இப்பிரச்சனை சரிசெய்து தரப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஃபோர்டு நிறுவனம் உலகத்தரமான வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் உறுதியாக இருக்கிறது, அதன் ஒருபகுதியாகவே இந்த ரீகால் அறிவிப்பை தாமாகவே முன்வந்து வெளியிடப்பட்டுள்ளது"

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டில் ஃபிகோ மற்றும் ஃபியஸ்டா கிளாசிக் மாடல் கார்கள் ரியர் டிவிஸ்ட் பீம் மற்றும் பவர் ஸ்டீரிங் ஹோஸ்-களில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 1,66,021 கார்கள் திரும்ப அழைக்கப்பட்டது.

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

இதனையடுத்து 2016-ல் ஏர் பேக்கை கட்டுப்படுத்தும் மென்பொருளில் ஏற்பட்ட பழுது காரணமாக 42,000 புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் காம்பாக்ட் செடன் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

சென்னையில் தயாரிக்கப்பட்ட ஃபோர்டு கார்களில் பழுது கண்டுபிடிப்பு..!!

ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்வதோடு நில்லாமல், முந்தைய தலைமுறை கார்களையும் தொடர்ந்து சோதனை செய்து அதில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தர தாமாக முன்வந்து ரீகால் அறிவிப்பை வெளியிட்டிருப்பது வாடிக்கையாளர்களின் மீது இருக்கும் மதிப்பை காட்டுவதாக உள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil about ford recalls figo and fiesta cars in india.
Story first published: Saturday, June 24, 2017, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X