மாருதி பலேனோ காருக்கு போட்டியாக புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை களமிறக்கும் ஃபோர்டு!

Written By:

மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலை ஃபோர்டு கார் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதுகுறித்து ஆட்டோகார் தளம் வெளியிட்டு இருக்கும் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பலேனோ காருக்கு போட்டியாக வரும் புதிய ஃபோர்டு கார்!

பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகின்றன. இந்த கார்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பும், வர்த்தகமும் இருந்து வருகிறது.

மாருதி பலேனோ காருக்கு போட்டியாக வரும் புதிய ஃபோர்டு கார்!

இதனை கருத்தில் கொண்டு புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலைக அறிமுகம் செய்வதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இந்தியா போன்ற வளரும் கார் மார்க்கெட்டுகளில் இந்த புதிய காரை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது ஃபோர்டு.

மாருதி பலேனோ காருக்கு போட்டியாக வரும் புதிய ஃபோர்டு கார்!

பி563 என்ற குறிப்பிடப்படும் புதிய பிளாட்ஃபார்மில் இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரும், புதிய மிட்சைஸ் செடான் காரும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஃபிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் புதிய ஹேட்ச்பேக் கார் மாருதி பலேனோவுக்கு நேர் போட்டியாக இருக்கும். இந்த கார் ஃபிகோ காரைவிட விலை அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

Recommended Video - Watch Now!
2018 Hyundai Verna Indian Model Unveiled | In Tamil - DriveSpark தமிழ்
மாருதி பலேனோ காருக்கு போட்டியாக வரும் புதிய ஃபோர்டு கார்!

அதேபோன்று, மிட்சைஸ் செடான் காரானது விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட ஃபியஸ்ட்டா காருக்கு மாற்றாகவும், ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்களுக்கு போட்டியாகவும் இருக்கும்.

மாருதி பலேனோ காருக்கு போட்டியாக வரும் புதிய ஃபோர்டு கார்!

இந்த புதிய ஹேட்ச்பேக் மற்றும் செடான் காரில் ஃபோர்டு நிறுவனத்தின் புதிய டிராகன் குடும்ப வரிசையிலான புதிய பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த எஞ்சின்கள் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடபப்பட இருக்கின்றன.

மாருதி பலேனோ காருக்கு போட்டியாக வரும் புதிய ஃபோர்டு கார்!

புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்கள் உருவாக்கப்பட்ட பி562 என்ற பிளாட்ஃபார்மின் அடிப்படையில்தான் புதிய பி563 பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, தயாரிப்பு செலவீனம் வெகுவாக கட்டுப்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், மிக சவாலான விலையில் இந்த கார்களை ஃபோர்டு அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
American carmaker Ford is developing a new platform for India and other developing markets which is expected to underpin off a range of new vehicles.
Story first published: Saturday, August 5, 2017, 13:36 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark