செவர்லே கார்களுக்கு சர்வீஸ் வழங்கும் மஹிந்திரா: சாத்தியப்படுமா இந்த கூட்டணி!

Written By:

கடந்த வாரத்தில் இந்தியாவில் விற்பனையை நிறுத்துவதாக கூறி பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனம் அதன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

வாங்கிய செவர்லே கார்களுக்கான சர்வீஸ் இந்தியாவில் கிடைக்குமா, கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது உட்பட பல கேள்விகளுடன் செவர்லே காரின் வாடிக்கையாளர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

சர்வீஸ் குறித்து இந்திய வாடிக்கையாளர்களிடம் நிலவிய பதற்றத்தை புரிந்துக்கொண்ட ஜெனரல் மோட்டார்ஸ், விற்பனையை நிறுத்தினாலும் செவர்லே கார்களுக்கான விற்பனைக்கு பிறகான சர்வீஸில் எந்த குறையும் ஏற்படாது என உறுதியளித்தது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

அதன்படி செவர்லே கார்களை தயாரித்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மஹிந்திரா நிறுவனத்துடன் விற்பனைக்கு பிறகான சர்வீஸை வழங்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

இந்தியாவில் சீனியர் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவிடம் செவர்லே கார்களுக்கான சர்வீஸ் வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்க மஹிந்திரா மறுத்துவிட்டது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

இதுகுறித்து எக்னாமிக் டைம்ஸ் இணையதளம் செவர்லே கார்களுக்கான சர்வீஸை மூன்றாவதாக எதாவது ஒரு நிறுவனம் மூலம் மஹிந்திரா வழங்க ஜெனரல் மோட்டார்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டாதாக செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

ஆனால் இந்த தகவலை ஜெனரல் மோட்டார்ஸ் முற்றிலும் மற்றுத்துள்ளது. செவர்லே கார்களுக்கான டீலர்களே வாடிக்கையாளர்களின் தேவகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்துள்ளது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

அமெரிக்காவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள செவர்லே உலகளவில் கார் உற்பத்தியில் மூன்றாவது நிலையில் உள்ளது.

இந்தியாவில் செவர்லே கார்களுக்கான விற்பனை குறையவே, இனி இந்தியாவில் செவர்லே கார்கள் ஏற்றுமதி மட்டுமே செய்யப்படும் என சமீபத்தில் அறிவித்தது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

அதன்படி மும்பைக்கு அருகே தலகான் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் செவர்லே கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க உட்பட பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்தது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

இதனால் அதிர்ச்சி அடைந்த தனது வாடிக்கையாளர்களுக்கு செவர்லே கார்களின் சர்வீஸ் குறித்து கவலைக்கொள்ள வேண்டாம் என தெரிவித்து.

விற்பனைக்கு பிறகான சர்வீஸ், வாரண்டி போன்ற தேவைகளை இந்தியளவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் 150 டீலர்களே பார்த்துக்கொள்வார்கள் என அந்நிறுவனம் கூறி வருகிறது.

மஹிந்திரா கையில் ஒப்படைக்கப்படும் செவர்லே கார்கள்!

இருந்தாலும் இதற்கிடையில் தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் செவர்லே கார்களுக்கான விற்பனைக்கு பிறகான சர்வீஸை இந்தியாவில் மஹிந்திரா மேற்கொள்ள கேட்டுக்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

பிறகான சர்வீஸிற்கு மஹிந்திரா உடன் செவர்லே பேச்சு வார்த்தை நடத்த வாய்பிருப்பதாகவும், இதுவரை அதற்கான ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை எனவும் தகவல்கள் கிடைக்கின்றன.

மேலும்... #செவர்லே #chevrolet
English summary
GM in Talks With Mahindra to Provide After Sales Serivces to Existing Customers of Chevrorlet... Click For More
Story first published: Saturday, May 27, 2017, 11:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark