அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

Written By:

சாகா வரம் பெற்ற காராக அம்பாசடர் காரை புகழ்வதுண்டு. எவ்வளவு பழமையானாலும் கூட புதுப்பொலிவு கொடுத்தால் மீண்டும் செகண்ட் இன்னிங்ஸ் ஆட தயாராகிவிடும். அந்தளவுக்கு நீடித்த உழைப்பை தர வல்ல அந்த மாடல் உற்பத்தியில் இருந்து நிறுத்தப்பட்டது கார் ஆர்வலர்களுக்கு ஏமாற்றம் தந்தது.

அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

அதேநேரத்தில், அதிதீவிர அம்பாசடர் கார் விரும்பிகள், அந்த காரை தங்களது வீட்டில் இன்னமும் பாதுகாத்து வருகின்றனற். அவ்வாறு அம்பாசடர் கார் மீது காதல் வைத்திருந்த கார் ஆர்வலருக்காக புதுப்பிப்பு பணிகளை மிக அட்டகாசமாக செய்து தந்துள்ளது கோவையை சேர்ந்த கிட் அப் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்.

அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

1988ம் வருடத்திய தயாரிப்பான அந்த காரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதுப்பொலிவு கொடுத்து அசர வைத்துள்ளது கோவை கிட் அப் ஆட்டோமோட்டிவ் நிறுவனம். இந்த காரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களை தொடர்ந்து காணலாம்.

அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

காரின் வெளிப்புறம், உட்புறம் என இரண்டிலுமே முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறத்தில் ஃப்ராஸன் மிட்நைட் பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ண பெயிண்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட இந்த கருப்பு வண்ணம் அம்பாசடர் காருக்கு புது மெருகு அளித்துள்ளது.

அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

ஹெட்லைட், க்ரில், டெயில் லைட்டுகள் ஆகியவை பழமை மாறாமல் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. க்ரில் அமைப்பு கூட அப்படியே புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

இன்டீரியரில் கருப்பு வண்ண ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி பொருத்தப்பட்டு இருக்கிறது. கூரையில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

டேன் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே வண்ணத்தில் டேஷ்போர்டு பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. மற்றபடி, ஸ்டீயரிங் வீல், கியர் லிவர் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் எந்த மாறுதல்களும் செய்யப்படவில்லை.

அம்பாசடர் காரை அட்டகாசமாக புதுப்பித்த கோவை நிறுவனம்!

இந்த காரில் பழைய எஞ்சினே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அல்லது இசுஸுவின் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றிருக்கலாம் என்பது கணிப்பு.

Images Source: Kit Up Automotive

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்கள்!

புதிய அஸ்டன் மார்ட்டின் வாங்கிஷ் எஸ் காரின் படங்களை கண்குளிர கண்டு மகிழுங்கள்.

English summary
HM Ambassador Retored By Coimbatore Based Kit Up Automotive.
Story first published: Friday, January 27, 2017, 13:01 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark