கார் சர்வீஸ் சேவைக்காக பிரத்யேக இணையதளத்தை அறிமுகப்படுத்திய ஹோண்டா!

Written By:

கார் சர்வீஸ் நடைமுறையை எளிதாக்கும் விதத்தில் பிரத்யேக இணைய பக்கத்தை திறந்திருக்கிறது ஹோண்டா கார் நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கார் சர்வீஸ் சேவைக்காக பிரத்யேக இணையதளத்தை துவக்கியது ஹோண்டா!

கார் சர்வீஸ் நடைமுறைகளை எளிதாக்கும் முயற்சிகளில் ஹோண்டா தீவிரமாக இறங்கி இருக்கிறது. கார் சர்வீஸ் செய்வதற்கான முன்பதிவு மற்றும் வெளிப்படையாகவும், வாடிக்கையாளர்களுக்கு எளிதாகவும் இருக்கும் விதத்தில் இந்த இணையப் பக்கம் துவங்கப்பட்டு இருக்கிறது.

கார் சர்வீஸ் சேவைக்காக பிரத்யேக இணையதளத்தை துவக்கியது ஹோண்டா!

www.hondacarindia.com என்ற இணைப்பில் இந்த இணையப் பக்கத்தின் சேவைகளை ஹோண்டா கார் வாடிகக்கையாளர்கள் பெற முடியும்.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
கார் சர்வீஸ் சேவைக்காக பிரத்யேக இணையதளத்தை துவக்கியது ஹோண்டா!

ஆன்லைன் மூலமாக சர்வீஸ் நேரத்தை முன்திவு செய்வது, சர்வீஸ் செலவீனம் குறித்த தோராய மதிப்பீட்டை தெரிந்து கொள்வதற்கான வசதிகள் இந்த இணையப் பக்கத்தில் உள்ளன.

கார் சர்வீஸ் சேவைக்காக பிரத்யேக இணையதளத்தை துவக்கியது ஹோண்டா!

மேலும், நீடிப்பு கால வாரண்டிக்கான கட்டணம், சாலை அவசர உதவி திட்டம் மற்றும் பராமரிப்பு திட்டங்கள் குறித்த விபரங்களும் இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கார் சர்வீஸ் சேவைக்காக பிரத்யேக இணையதளத்தை துவக்கியது ஹோண்டா!

இவை தவிர்த்து, கார் பராமரிப்பு குறித்து வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்குமான கேள்வி- பதில் பகுதியும் இந்த இணையப் பக்கத்தில் உள்ளது.

கார் சர்வீஸ் சேவைக்காக பிரத்யேக இணையதளத்தை துவக்கியது ஹோண்டா!

இந்த புதிய இணைய பக்கம் ஹோண்டா கார் வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் குறித்த காலத்தில், தங்களுக்கு சவுகரியமான நேரத்தில் காரை சர்வீஸ் செய்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

English summary
Honda Cars India has launched a new Service Website dedicated to its valuable customers and is available on company's corporate website www.hondacarindia.com.
Story first published: Wednesday, September 6, 2017, 11:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark