இந்தியாவில் உச்ச விற்பனையை பெற்ற சிட்டி மாடல் காரின் விலையில் அதிரடி மாற்றம்; காரணம் இதுதான்..!!

இந்தியாவில் உச்ச விற்பனையை பெற்ற சிட்டி மாடல் காரின் விலையில் அதிரடி மாற்றம்; காரணம் இதுதான்..!!

By Azhagar

ஜுன் மாத முடிவில் இந்தியாவில் அதிக விற்பனை திறனை பெற்று முதலிடத்தை பிடித்த சிட்டி காரின் விலையை, ஹோண்டா நிறுவனம் குறைத்துள்ளது.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

ஜிஎஸ்டி-க்கு பிறகு பல்வேறு கார் மாடல்களின் விலை குறைந்தன. இதனால் பல நிறுவனங்களின் கார்கள் அதிக விற்பனையை இந்தியாவில் பெற்று வருகின்றன.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

இதில் ஹோண்டா நிறுவனம் தனது கார் தயாரிப்புகளுக்கான விலையை, மாடல்களுக்கு தகுந்தவாறு ரூ.10,000 முதல் ரூ.1.31 லட்சம் வரை குறைத்து அறிவிப்பு செய்துள்ளது.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

இதன்மூலம் இந்தியாவில் எப்போதும் விற்பனை திறனை அதிகமாக பெற்றிருக்கும் ஹோண்டா சிட்டி காரின் விலை கனிசமாக குறைந்துள்ளது.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

ஜிஎஸ்டி-க்கு பிறகான ஹோண்டா சிட்டி காரின் விலை (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில்)

மாடல் ஜிஎஸ்டி-க்கு முன் ஆன்-ரோடு விலை விலையில் உள்ள வேறுபாடு
ஹோண்டா சிட்டி ரூ. 8.62- ரூ.13.71 லட்சம் ரூ.8.46- ரூ. 13.43 லட்சம் ரூ. 16,510- ரூ. 28,005
ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

ஹோண்டா சிட்டி-க்கான விலை மாற்றம் ஒரு புறமிருந்தாலும், அந்நிறுவனத்தின் வரவேற்பு பெற்ற அக்கார்டு மாடல் காரின் விலை மாற்றத்தை குறித்து எந்த அறிவிப்பையும் ஹோண்டா வெளியிடவில்லை.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம், ஆட்டோமொபைல் துறையில் 28 சதவீத வரியுடன் செஸ்ஸிற்கான மதிப்பு கூடுதலாக இணைகிறது.

இது காரின் மாடல், வடிவமைப்பு மற்றும் எஞ்சின் திறன் ஆகியவற்றைக்கொண்டு மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

இந்தியாவில் முதன்மையான விற்பனை திறனை பெற்றுள்ள ஹோண்டா சிட்டி, பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் தயாரிக்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

பெட்ரோல் சிட்டி மாடல் கார் 1.5 லிட்டர் எஞ்சின் திறனுடன் 117.6 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கும். மேலும் இதில் 145 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

அதேபோல, டீசல் மாடல் சிட்டி கார் 1.5 லிட்டர் திறன் கொண்ட எஞ்சினைக் கொண்டது. இது 98 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

மேலும் பெட்ரோல் சிட்டி காரில் மாடல்களுக்கு ஏற்றவாறு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உள்ளது. டீசல் கார்களில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மட்டுமே உள்ளது.

ஹோண்டா சிட்டி காருக்கு புதிய விலை அறிவிப்பு.!!

இந்தியாவில் எல்லா பகுதிகளிலும் வரவேற்பு பெற்ற மாடல் என்றால் ஹோண்டா சிட்டி தான். தற்போது ஜிஎஸ்டி-யால் ஏற்பட்டுள்ள விலை குறைப்பு சிட்டி காருக்கான விற்பனை திறனை நிச்சயம் இந்தியாவில் அதிகரிக்கும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
With the GST effective from July 1, 2017, prices of the Honda City, its best-selling vehicle in India, is now cheaper. Click for Details...
Story first published: Monday, July 10, 2017, 15:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X