புதிய ஹோண்டா சிட்டி காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!

Written By:

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் அனைவருக்கும் விருப்பமான தேர்வாக இருப்பது ஹோண்டா சிட்டி கார். மாருதி சியாஸ் காரால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் ஹோண்டா சிட்டி காரை விற்பனையில் மீண்டும் நம்பர்-1 மாடலாக கொண்டு வருவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

இதற்காக, வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி காரை தயாரித்துள்ளது. கடந்த 12ந் தேதி தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட, இந்த காரை அடுத்து இந்தியாவில் களமிறக்க ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

இந்த தகவல்கள் செடான் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மத்தியில் அதிக ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த மாதம் இந்தியாவில் புதிய ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த புதிய மாடலுக்கு ஹோண்டா டீலர்களில் ரகசிய முன்பதிவும் நடந்து வருகிறதாம்.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

புதிய ஹோண்டா சிட்டி காரின் முகப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய சிவிக் காரில் இருப்பது போன்ற க்ரோம் பட்டையுடன் கூடிய வலுவான க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள் போன்றவற்றுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

புதிய ஹோண்டா சிட்டி காரில் 16 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது ஹோண்டா சிட்டி காரின் அழகை மேலும் மெருகூட்டுவதாக இருக்கும். பின்புறத்தில் புதிய எல்இடி டெயில் லைட்டுகள், மறுவடிவமைப்பு பெற்ற பம்பர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

புதிய ஹோண்டா சிட்டி காரில் பிளாஃபுங்கட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கும். பிரிமியம் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும் ஹோண்டா சிட்டியின் பிரிமியம் அந்தஸ்தை உயர்ந்துவதாக இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

புதிய ஹோண்டா சிட்டி காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகல், பிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை இடம்பெற்று இருக்கும். இதுதவிர, இன்ன பிற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்று இருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

தற்போதைய மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் 117 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை வெளிப்படுத்த வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள்தான் புதிய ஹோண்டா சிட்டி காரிலும் இடம்பெற்றிருக்கும்.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டதாக வருகிறது. டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருக்காது.

புதிய ஹோண்டா சிட்டி காருக்கு ரகசிய முன்பதிவு!

தற்போது விற்பனையில் உள்ள மாடலைவிட ரூ.25,000 கூடுதல் விலையில் புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் ஆகிய கார் மாடல்களுக்கு நேர் போட்டியாக இருக்கும்.

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் படங்கள்!

புதிய யமஹா எஃப்இசட்25 பைக்கின் பிரத்யேக படங்களின் தொகுப்பை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

English summary
The 2017 City sedan will continue to use the same engine options, a 1.5-litre petrol and diesel powerplant.
Story first published: Wednesday, January 25, 2017, 9:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark