கிராஷ் டெஸ்டில் அவார்டு வாங்கிய புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

கிராஷ் டெஸ்டில் சிறந்த காராக புதிய 2017 ஹோண்டா சிஆர்வி கார் தேர்வாகியுள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.

By Arun

ஹோண்டா நிறுவனத்தின் காம்பாக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடலான 'சிஆர்-வி' 1995 ஆம் முதல் உலகம் முழுவதும் விற்பனையில் இருந்துவரும் ஒரு பிரபலமான காராகும். 2016ஆம் ஆண்டு முதல் இதன் 5ம் தலைமுறை கார்கள் விற்பனையில் உள்ளது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

மேம்படுத்தப்பட்ட புதிய 2017 சிஆர்-வி காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா நிறுவனம். இந்தக் கார்கள் விபத்தில் சிக்கினாலும் சேதமடையாதவாறு உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுளது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

புதிய ஹோண்டா சிஆர்-வி காரில் "பிரண்ட் கிராஷ் பிரிவென்ஷன்" என்ற அமைப்பு ஆப்ஷனலாக கிடைக்கிறது. விபத்துகளில் சிக்கினாலும் இதன் முகப்பு சேதமாகாமல் தடுப்பதோடு, பயணிகளுக்கு பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் தொழில்நுட்பம் இதுவாகும்.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

அமெரிக்காவில் உள்ள ‘இன்சூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹைவே' என்ற லாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பு, மேம்படுத்தப்பட்ட புதிய 2017 ஹோண்டா சிஆர்வி காருக்கு ‘Top Safety Pick+' என்ற விருதை அளித்துள்ளது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

உலகலாவிய இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் இந்த அமைப்பு 1959ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் தொடங்கப்பட்டதாகும். மோட்டார் வாகன விபத்துகளை குறைப்பதிலும், உயிரிழப்புகளை தடுப்பதிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

ஒவ்வொரு வாகனங்களிலும் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் அடிப்படையில் அந்த கார் மாடல்களை மதிப்பீடு செய்து வரும் இந்த அமைப்பானது, சிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை சோதித்துப் பார்த்து விருதும் அளித்து வருகிறது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

இதன்படி சமீபத்தில் புதிய ஹோண்டா சிஆர்வி காருக்கு ‘Top Safety Pick+' என்ற உயர் பாதுகாப்பு நிறைந்த காருக்கான விருதை இந்த அமைப்பு அளித்துள்ளது. சோதனையில், ஹோண்டா சிஆர்வி டூரிங் வெர்ஷனில் உள்ள எல்ஈடி முகப்பு விளக்கு நல்ல மதிப்பீடு பெற்றுள்ளது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

அதே போல சிஆர்வியின் இதர வேரியண்டுகளில் உள்ள ஹாலோஜன் முகப்பு விளக்குக்கு நடுத்தர மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

ஹோண்டா சிஆர்வி காரின் முன்புறத்தில் ஆப்ஷனலாக கிடைக்கும் மோதல் தடுப்பு அமைப்பான பிரண்ட் கிராஷ் ப்ரிவென்ஷன் அமைப்பு, ‘இன்சூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹைவே' அமைப்பின் ட்ராக் டெஸ்ட் சோதனைப் பாதையில் பரிசோதிக்கப்பட்டது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

பிரண்ட் கிராஷ் ப்ரிவென்ஷன் சிஸ்டத்தில், மோதல் ஏற்படுவதை எச்சரிக்கும் அமைப்பான பார்வார்டு கொலிஷன் வார்னிங் சிஸ்டமும் இணைந்துள்ளது. இது அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறது.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

‘இன்சூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஹைவே' அமைப்பின் மூலம் ‘Top Safety Pick+' விருதை ஒரு கார் வெல்ல வேண்டும் என்றால் ஸ்மால் ஓவர்லாப் ஃபிரண்ட், மாடிரேட் ஓவர்லாப் ஃபிரண்ட், சைடு, தலை பாதுகாப்பு சோதனை மற்றும் ரூஃப் வலிமை சோதனைகளில் வென்று அவற்றில் சிறந்த மதிப்பீடுகளும் பெற்றிருக்க வேண்டும்.

 கிராஷ் டெஸ்டில் சாதித்த புதிய ஹோண்டா சிஆர்-வி கார்

கிராஷ் டெஸ்டின் போது புதிய 2017 ஹோண்டா சிஆர்வி கார் இந்த அனைத்து சோதனைகளிலும் வென்றதோடு, கடினமான

ஸ்மால் ஓவர்லாப் சோதனையிலும் நல்ல மதிப்பீட்டை பெற்றது கவனிக்கத்தக்கதாகும்.

ஹோண்டா சிஆர்வி எஸ்யுவி காருக்கு நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட் வீடியோவை மேலே காணுங்கள்..

Most Read Articles
English summary
honda cr-v car gets awarded in crash test and becomes safest car in world
Story first published: Wednesday, March 22, 2017, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X