15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் அல்ட்ரா தொழில்நுட்பம் பெற்ற ஹோண்டா மின்சார கார்..!!

15 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் அல்ட்ரா தொழில்நுட்பம் பெற்ற ஹோண்டா மின்சார கார்..!!

By Azhagar

2017 டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் ஸ்போர்ட்ஸ் மின்சார காரை அறிமுகம் செய்தது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

2019ம் ஆண்டில் இந்த காருக்கான உற்பத்தி தொடங்கப்பட்டு, 2020ம் ஆண்டு முதல் ஹோண்டா ஸ்போர்ட்ஸ் மின்சார காருக்கான விற்பனை தொடங்கும். ஹோண்டாவின் இந்த மின்சார கார் பற்றிய மேலும் பல தகவல்களை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

அதிலும் இந்த காரின் பேட்டரி 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் என்ற தகவல் பலரையும் ஆச்சர்யமடைய செய்துள்ளது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

உலகளவில் உள்ள முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு தொழில்நுட்பங்களை அறிவித்து அவற்றில் மின்சார கார்களை தயாரித்து வருகின்றன.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

இதில் குறிப்பிட்ட நேரத்தில் கார்களை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் சாத்தியப்படுமா என்பது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. ஆனால் அவற்றில் ஹோண்டா புரட்சியை செய்துள்ளது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

ஹோண்டாவின் புதிய ஸ்போர்ட்ஸ் மின்சார கார் வெறும் 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் திறனுடன் தயாராகியுள்ளது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

ஸ்போர்ட்ஸ் மாடலை தவிர மேலும் பல கார்களை மின்சார ஆற்றலில் உருவாக்க ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.

இவை அனைத்தும் 15 நிமிடங்களுக்குள் சார்ஜ் ஆகும் திறன் மற்றும் மணிக்கு 241கி.மீ வேகத்தை பெற்றதாக இருக்கும்.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

அல்ட்ரா தரத்திலான வேகத்தை பெற ஹோண்டா நிறுவனம் மேலும் பல்வேறு பேட்டரிக்கான சிறப்பம்சங்களை வழங்கவுள்ளது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

மின்சார அற்றல் கொண்ட வாகனங்களை உருவாக்க பல்வேறு நாடுகளை போலவே இந்தியாவும் முயன்று வருகிறது. ஆனால் அதற்கான கட்டமைப்பு நமது நாட்டில் குறைவாகவே உள்ளது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

இருந்தாலும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் வாகன துறை அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

ஹோண்டாவின் இந்த அல்ட்ரா சார்ஜிங் தொழில்நுட்பம் ஃபிஸ்கர் ஈ-மோஷன் இ.வி என்ற நிறுவனத்தின் செயல்பாட்டை கொண்டது.நிச்சயம் இது வெற்றிபெறும் தொழில்நுட்பமாக உருவெடுக்கும் என ஹோண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

சார்ஜிங் மட்டும் விரைவாக நடக்காமல், பயன்பாட்டிற்கு ஏற்ப காரின் பேட்டரிகளில் இருந்து சார்ஜிங் இறங்குவதும் மிக மிக குறைவாகவே இருக்கும்.

ஹோண்டாவின் அல்ட்ரா சார்ஜிங் திறன் பெற்ற மின்சார கார்..!!

மின்சார கார்கள் மீது மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், அதற்கான கட்டுமானத்தை சரியாக உருவாக்க வேண்டும் என்பதில் தான் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவாலே உள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil: Honda Electric Vehicles To Charge In Just 15 Minutes. Click for Details...
Story first published: Thursday, November 23, 2017, 17:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X